ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 சரிவு..

Published:

996344 - 2026
#image_title

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 27) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் மே 4-ம் தேதி சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெள்ளிக்கிழமை தங்கம் விலை 45 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,600-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,560-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி கிராமுக்கு 0.80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,000 ஆக இருக்கிறது

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img