புதிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு..

1303382 4 judge - 2026
#image_title

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்றார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்று கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, மும்பை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமிக்குமாறு, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த ஏப். 19-ல் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.

அந்தப் பரிந்துரையை ஏற்று,மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா இன்று காலை பதவியேற்று கொண்டார். சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற 33வது தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். அடுத்த ஆண்டு மே மாதம் சஞ்சய் விஜய்குமார் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், ரகுபதி, தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 1962-ம் ஆண்டு மே மாதம் மராட்டிய மாநிலத்தில் பிறந்த நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து 1985-ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கினார்.

2010-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்துவருகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி இவர் ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories