
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வைகாசி ஹஸ்தம் நாளில் பிரதிஷ்டை தின பூஜைகள் இன்று துவங்கியது.இரவு படிபூஜை முடித்து ஹரிவராஸனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் ஐயப்பன் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

பிரதிஷ்டை நாளான இன்று செவ்வாய்க்கிழமை 30 -ஆம் தேதி பூஜைகள் நடைபெறும்.மதியம் களபாபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு ஐயப்பன் அருள்பாலிப்பாா். அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை மூடப்படவுள்ளது.
பிரதிஷ்டை தின பூஜைக்காக திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரூ மகேஷ் மோகனரரு முன்னிலையில்ஐயப்பன் சன்னதி சபரிமலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றினாா். பின்னா் மாளிகைபுரத்தம்மன் கோயில் நடை சாவியை ஹரிஹரன் நம்பூதிரியிடம் வழங்கி பின்னா் 18 -ஆம் படி முன் உள்ள கற்பூர ஆழியில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீ மூட்டினாா். திறப்பு நாளில் பூஜைகள் இல்லை.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மஹாகணபதி ஹோமம், 7.30 மணி முதல் நெய் அபிஷேகம், உதயாஸ்தன பூஜை, 11 மணிக்கு மேல் சந்தன அபிஷேகம் சிறப்பு அலங்காரமும் நடைபெறும். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தா்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவாா்கள் .