கம்பத்தில் அரிக்கொம்பன் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு..

16851707491138 1 - 2026
#கம்பத்தில் அரிக்கொம்பன்

தேனி மாவட்டம் கம்பத்தில் அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் ஆசாரிமார் தெருவில் வசிப்பவர் பால்ராஜ் (65). இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் இரவு காவலராக வேலை பார்த்தார்.

கடந்த மே 27 – இல் கம்பம் நகருக்குள் அரிசிக்கொம்பன் யானை புகுந்து நாட்டுக்கல், நந்தகோபாலன் கோயில் தெருக்களில் சுற்றி வந்தது. 

IMG 20230530 WA0072 - 2026
#பால்ராஜ்

அப்போது பால்ராஜ் இரவு பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்தார். அவரை கடந்த சென்ற யானை துதிக்கையால் தள்ளி விட்டதில் பலத்த காயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். இதுபற்றி கம்பம் தெற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயம்பட்ட பால்ராஜை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் எம்எல்ஏக்கள் பார்வையாட்டு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கியிருந்தனர். 

தேனி மாவட்டத்தில் அரிக்கொம்பன் யானயை பிடிக்க 5 – ஆவது நாளாக வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அரிக்கொம்பன் சண்முகா நதி அணை அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. 

அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் அந்த பகுதிகளுக்குள் செல்லாதவாறு காவல் துறையினர் தடை ஏற்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories