பயங்கரவாத நெட்வொர்க் மூடி மறைக்க தமிழக அரசு உதவி: தி கேரளா ஸ்டோரி-விபுல் ஷா ..

999290 - 2026
#image_title

தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட அனுமதிக்காததன் மூலம் பயங்கரவாத வலைப்பின்னலை மூடி மறைக்க உதவியதாக படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தென்னிந்தியாவில் சோபிக்காத இப்படம், இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.200 கோடியை கடந்து வசூலித்துள்ளது.

இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க அரசுகளை ‘தி கேரளா ஸ்டோரி’ தயாரிப்பாளர் விபுல் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அப்பேட்டியில் அவர் பேசியதாவது: “உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் முற்றிலுமாக நிராகரித்துள்ளன. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். மீறி படத்தை வெளியிட்டால் திரையரங்க உரிமம் புதுப்பிக்கப்படாது என்றும் தாக்குதல் ஏதேனும் நடந்தால் பாதுகாப்பு கிடைக்காது என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் இப்படத்துக்காக தங்கள் உடைமைகளை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

இந்த இரண்டு மாநில அரசுகளும்தான் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக எப்போதும் குற்றம்சாட்டி வந்துள்ளன. ஆனால் அவர்களே உச்சநீதிமன்ற உத்தரவை நிராகரித்து இப்படத்தை அனுமதிக்க மறுப்பது முரண். காங்கிரஸ் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கிறது. ஆனால் அவர்களது சொந்த மாநிலங்களில் அவர்கள் செய்வது இதைத்தான். இந்த இரண்டு மாநில மக்களும், பாதிக்கப்பட்ட பெண்களுடன் நிற்கத் தயாராக இல்லாத அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும். உண்மையில் அவை இந்த பயங்கரவாத வலைப்பின்னலை அம்பலப்படுத்துவதை மூடி மறைக்க உதவுகின்றனர்.” இவ்வாறு விபு ஷா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories