
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,410-கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி விலை – நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ.0.50 குறைந்து ஒரு கிராம் ரூ.76.50-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உயர்ந்தும் குறைந்தும் வந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் மே 26-ம் தேதி தங்கம் விலை 45 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருந்தது. மே 31-ம் தேதி மீண்டும் ரூ.45 ஆயிரத்தை எட்டியது.