மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 10 கிலோ தங்க கட்டிகள் மீட்பு

images 61 - 2026
#image_title

ராமநாதபுரம் மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 10 கிலோ தங்க கட்டிகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நவீன சுவாச கருவிகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றின் உதவியுடன் நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டிகளை தேடினர். நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினரும் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பின் இந்த கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக அந்த நாட்டில் இருந்து கடத்தல்காரர்கள் அதிகளவில் தங்க கட்டிகளை ராமநாதபுரத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை மன்னார் வளைகுடாவில் இருந்து கடல் வழியாக ராமேசுவரத்தை அடுத்த மண்டபத்துக்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய கடலோர காவல்படை உதவியுடன் அதிகாரிகள் குறிப்பிட்ட கடல் வழித்தடத்தில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது படகில் வந்த கடத்தல்காரர்கள் மண்டபம் அருகே உள்ள முயல் தீவு பகுதியில் அதிகாரிகளை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசியதாக தெரிகிறது. இது தொடர்பாக படகில் இருந்த வேதாளையை சேர்ந்த 3 பேரை பிடித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி ஏற்கனவே கடத்தி வேதாளையை சேர்ந்த ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி நிபுணத்துவம் பெற்ற நீச்சல் பயிற்சி பெற்ற, வீரர்கள் உதவியுடன் தங்க கட்டிகள் வீசப்பட்ட கடலில் இறங்கி தேடும் பணி நடந்தது. நவீன சுவாச கருவிகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றின் உதவியுடன் நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டிகளை தேடினர். ஆனால் 2 நாட்களாக எதுவும் சிக்கவில்லை. இரவு நேரங்களில் வேறு யாரேனும் அந்தப் பகுதிகளில் இறங்கி தங்க கட்டிகளை எடுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் தங்க கட்டிகளை தேடும் பணி நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் தற்போது கடல் காற்று அதிகமாக வீசி வருவதால் சில மணி நேரம் பணியில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரிகளின் தகுந்த ஆலோசனையோடு வீரர்கள் தொடர்ந்து தங்க கட்டிகளை தேடி வந்தனர்.

இவர்களோடு நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினரும் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் இன்று மதியம் ஆழ்கடலில் தங்க கட்டிகள் வைக்கப்பட்டிருந்த பார்சலை கடலோர காவல்படை வீரர்கள் கண்டெடுத்து மீட்டனர். மேலே கொண்டு வரப்பட்ட பார்சல் மண்டபம் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அதிகாரிகள் முன்னிலையில் பார்சல் கட்டி உடைக்கப்பட்டது. அப்போது அதில் 10 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 10 கோடி ஆகும். தங்கத்தை மீட்ட அதிகாரிகள் அதனை கடத்தி வந்த கும்பல் பின்னணி குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories