
அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் வரும் 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கப்படுவதாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு தெரிவித்தது.
சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டது. அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா பெயரில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு செயலற்றதாகிவிடும். இனி அவர்கள் ஜாமீன் கேட்டுத்தான் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
முன்னதாக செந்தில்பாலாஜி கைது விஷயத்தில் அமலாக்கத்துறை கோரிக்கையைத் தொடர்ந்து நீதிபதி மருத்துவமனை செல்ல வுள்ளதாக தகவல் வெளியானது! அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருப்பதால், அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்த முடியாத சூழலில் இருக்கிறது அமலாக்கத்துறை. அதனால், மருத்துவமனைக்கே நீதிபதி வந்து விசாரித்து, செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. அதையேற்று, நீதிபதி ஒருவர் ஓமந்தூரார் அரசு
மருத்துவமனைக்குச் செல்லவுள்ளதாகக் கூறப்பட்டது.