சபரிமலையில் ஆனி மாத பூஜை வழிபாடு இன்று துவக்கம்.‌

1899138 sabarimala - 2026
சபரிமலையில் ஆனி மாத பூஜை வழிபாடு இன்று துவங்கியது.

பிரசித்தி பெற்ற சபரிமலையில் ஆனி மாத பூஜை வழிபாடு இன்று துவங்கியது.

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று 15-ந்தேதி திறக்கப்பட்டு இன்று ஆனி மாதப்பிறப்பு முதல் பூஜைகள் துவங்கியது. பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக 15-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்தினார். இதனை தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இன்று 16-ந் தேதி காலை முதல் ஐயப்பனுக்கு அபிஷேகம் பூஜை வழிபாடு துவங்கியது.வரும்20-ந் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும். ஹரிவராஸனம் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories