
கோவில்களில் திருமணத் திட்டம் அரசியல் லாபமா? திருக்கோவில் நிதியை அழிக்கும் திட்டமா? இன்று இந்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார் .அவரது அறிக்கை…
திருக்கோவில்களில் திருமண திட்டம் என்பது உண்மையில் ஏழை எளிய குடும்பத்திற்கு நன்மை
ஆரம்பித்த போதே இது அரசியல் நோக்கம் கொண்டது என பேசப்பட்டது. இது குறித்து தற்போது செய்தி குறிப்பு வெளிப்பட்டுள்ளது. திருமண திட்டத்திற்கு நன்கொடையாளர் கிடைக்கவில்லை என்றால் கோவில் நிதியில் இருந்து செலவு செய்யலாம்.
கோவில் கும்பாபிஷேகத்திற்குகூட கோவில் நிதி பயன்படுத்தாத நிலை போய் கோவில் வழிபாட்டிற்கு சம்பந்தமில்லாத பணிக்கு கோவில் நிதியை பயன்படுத்துவது என்பது எந்த வகையில் ஏற்புடையது?
உயர்நீதிமன்றம் எத்தனை முறை கோவில் நிதி கோவில் வழிபாட்டிற்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று கூறினாலும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அதனை மதிப்பதில்லை.
நன்கொடையாளர்கள் கிடைக்கவில்லை என்றால் எம்.எல்.ஏ. தொகுதி நல நிதியில் இருந்து செலவு செய்யட்டும். மேலும் தங்கம் மார்கெட் நிலவரத்திற்கு ஏற்ப வாங்கலாம் என்பது மோசடிக்கு துணைபோகும்.
பதிவு திருமணம் செய்வதற்கு 15நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பது விதி. அரசியல்வாதிகள் நடத்துகின்ற இலவச திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்க்கிறோம். எத்தனை முறைகேடுகளை பார்க்கிறோம்.
எனவே திருக்கோவிலில் நிகழ்த்தப்படும் திருமணங்களுக்கு அதேபோல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம். முன் அறிவிப்பு செய்து தகுதியானவர்கள் பயனடைய வேண்டும் என்ற தெளிவோடு செயல்படுத்த வேண்டும்.
அரசியலுக்காக கோவில் நிதியை அழிக்கும் சிந்தனையை இந்து சமய அறநிலையத்துறை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.