
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்
பகுதி 1 – 1975 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
கிரிக்கட் விளையாட்டில் இப்போது (1) ஆண்கள் டெஸ்ட் கிரிக்கட்டுக்கான உலகக் கோப்பை (2) ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பை, (3) டி20 உலகக் கோப்பை நடக்கின்றன. இவை தவிர பெண்கள் உலகக் கோப்பைப் போட்டிகளும் நடக்கின்றன. அடுத்த ஒருநாள் ஆண்கம் கிரிக்கட் உலகக் கோப்பை ஆட்டங்கள் இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இது 13ஆவது ஒருநாள் உலகக் கோப்பையாகும்.
முதல் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி 1975ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்தது. அன்றைய நாளில் இத்தகையதொரு போட்டியை இங்கிலாந்து தவிர வேறு எந்த நாட்டிலும் நடத்த முடியாத சூழ்நிலை இருந்தது. 1975 போட்டி ஜூன் 7 அன்று தொடங்கியது. முதல் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்பட்டன.
இவை “ப்ருடென்ஷியல் பிஎல்சி” நிறுவனத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்டதால் ‘ப்ருடென்ஷியல் கோப்பை’ என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டது. போட்டிகள் ஒரு அணிக்கு 60 ஆறு-பந்து ஓவர்கள் கொண்டதாக இருந்தது, பகலில், பாரம்பரிய வடிவத்தில் விளையாடப்பட்டது, வீரர்கள் கிரிக்கெட் வெள்ளை சீருடை அணிந்து சிவப்பு கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி விளையாடினர்.
முதல் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் (அப்போது இவை மட்டுமே டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளாக இருந்தன), இலங்கை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் அணிகளும் விளையாடின. நிறவெறிப் பிரச்சனை காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அச்சமயத்தில் தென் ஆப்பிரிக்கா தடை செய்யப்பட்டிருந்தது.
எட்டு அணிகளும் நான்கு நான்கு அணிகளாக குரூப் A குரூப் B எனப் பிரிக்கப்படிருந்தன. குரூப் A பிரிவில் இங்கிலாந்து, நியுசிலாந்து, இந்தியா, கிழக்கு ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றிருந்தன. குரூப் B பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. குரூப் A பிரிவில் இருந்து இங்கிலாந்தும் நியுசிலாந்து அணியும் தேர்வாயின:
குரூப் B பிரிவில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தேர்வாயின. அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியையும் மேற்கு இந்தியத்தீவுகள் நியுசிலாந்து அணியையும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.
லார்ட்ஸில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மேற்கிந்தியத் தீவுகள் இந்தப் போட்டியை வென்றது. முதலில் ஆடிய மேற்கு இந்தியத்தீவுகள் அணி 60 ஓவரில் எட்டு விக்கட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. கிளைவ் லாய்ட் 102 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் கேரி கில்மோர் 48 ரன்களுக்கு 5 விக்கட் எடுத்தார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 58.4 ஓவரில் 274 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதில் ஐந்து இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ரன் அவுட்.
இந்த போட்டிகளில் ரிகார்டுகளுக்குப் பஞ்சம் இருக்கவில்லை. நியூசிலாந்தின் கிளன் டர்னர் இரண்டு நூறு அடித்தார்; அதிக பட்ச ஸ்கோராக அவர் ஆட்டமிழக்காமல் 171 ரன் எடுத்தார். இந்தியாவோடு விளையாடிய முதல் ஆட்டத்திலேயே இங்கிலாந்து அணி 334 ரன் எடுத்தது. இங்கிலாந்தின் டென்னிஸ் அமிஸ் 137 ரன் எடுத்தார். 1975 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது ODIயில் ஹிட்-விக்கெட் எடுத்த முதல் பேட்ஸ்மேன் வெஸ்ட் இண்டீஸின் ராய் ஃப்ரெட்ரிக்ஸ் ஆவார்.
இந்திய அணி இந்தப் போட்டியில் ஒரு மோசமான சாதனை படைத்தது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 60 ஓவரில் 3 விக்கட் இழப்பிற்கு 132 ரன் கள் எடுத்தது. இதில் கவாஸ்கர் 60 ஓவர்கள் (174 பந்துகள்) விளையாடி, 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கிழக்கு ஆப்பிரிக்க அணியை 55.3 ஓவரில் 120 ரன்னுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.
அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 29.5 ஓவரில் 123 ரன் எடுத்து வெற்றி பெற்றது; கவாஸ்கர் (65 ரன்), ஃபாரூக் இஞ்சினியர் (54 ரன்) இருவரும் ஆட்டமிழக்காமல் ஆடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் அபித் அலி 70 ரன்கள் அடித்தார்.
1979இல் நிலமை மாறியதா? நாளை பார்க்கலா