spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்திறனற்ற ஊழல் திமுக., அரசின் தோல்விக்கு ஆளுநரா பொறுப்பு?: ஸ்டாலினுக்கு அண்ணாமலை 16 கேள்விகள்!

திறனற்ற ஊழல் திமுக., அரசின் தோல்விக்கு ஆளுநரா பொறுப்பு?: ஸ்டாலினுக்கு அண்ணாமலை 16 கேள்விகள்!

- Advertisement -

ஆளுநர் மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியது தொடர்பாக, அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். திறனற்ற திமுக., அரசின் தோல்விகளுக்கு ஆளுநர் பொறுப்பா? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் ஆளுநர் தடுத்தாரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி இதற்கெல்லாம் ஆளுநரா பொறுப்பு? என்ற கேள்வியை எழுப்பி தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூகத் தளங்களில் பகிர்ந்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட ‘டிவிட்டர்’ பதிவு:-

ஆளுநரின் செயல்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கதறலை நீண்ட அறிக்கையாக தயாரித்து குடியரசுத் தலைவருக்கு புகாராக அனுப்பி உள்ளார். மு.க.ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது அவரது தேவைகளை ஆளுநர் நிறைவேற்றினார் என்பதை அவர் மறந்துவிட்டார்.

மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஆளுநர் அரசு தயாரிக்கும் அறிக்கையை சட்டசபையில் படித்து வருகிறார் என்று கூறினார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநரிடம் கேட்டு கொண்டார். ஆனால் இன்று இதில் சிக்கல்கள் இருப்பதாக புகார் தெரிவிக்கிறார்.

1. ஜி.யு. போப் மொழி பெயர்த்த திருக்குறளின் விளக்கத்தை ஆளுநர் ஏற்க மறுத்தது எப்படி அரசாங்கத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதாக அமையும்?.

2. தமிழ் இலக்கியத்தின் சாராம்சத்தை மிஷனரிகள் அழித்தனர் என்று ஆளுநர் சொன்ன கருத்து அரசாங்கத்தின் செயல்பாட்டை எவ்வாறு சீர்குலைப்பதாக அமையும்?.

3. வேங்கைவயல் சம்பவத்தில் தாமதமாகும் நீதிக்கு ஆளுநர் பொறுப்பா?.

4. பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரியை உளவுத்துறையின் தலைவராக ஆக்குவதற்கு ஆளுநர் வாய்மூடி பார்வையாளராக இருக்க வேண்டுமா?

5. ஆளுநர் திமுக., அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் தடுத்துள்ளாரா?

6. ஊழலில் திளைக்கும் திமுக., அரசு 2 ஆண்டுகள் ஆகியும் 90 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்?

7. ஆளுநர் தனது மனசாட்சியை புதைத்து, தயாரிக்கப்பட்ட பொய்யை சட்டசபையில் படிக்க வேண்டுமா?.

8. இன்று மாநிலத்தில் நிலவும் சட்டமீறலுக்கு ஆளுநரா பொறுப்பு?

9. இன்று மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் மற்றும் கற்கள் கடத்தலுக்கு ஆளுநரா பொறுப்பு?

10. மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய அரசு அதிகாரிகளின் மரணத்துக்கு ஆளுநரா பொறுப்பு?

11. தொடர்ந்து 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத எஸ்சிஎஸ்பி நிதிக்கு ஆளுநரா பொறுப்பு?

12. மாநிலத்தில் மதுவால் நிகழும் மரணங்களுக்கு ஆளுநரா பொறுப்பு?

13. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் வீழ்ச்சி அடைந்ததற்கு ஆளுநரா பொறுப்பு?

14. மாநிலத்தில் நடக்கும் சிறை மரணங்களுக்கு ஆளுநரா பொறுப்பு?

15. தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் தலைவிரித்தாடும் ஊழலுக்கு ஆளுநரா பொறுப்பு?

16. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஆளுநரா பொறுப்பு?

இவ்வாறு தனது பதிவில் 16 கேள்விகளை எழுப்பியுள்ளார் அண்ணாமலை. மேலும், தமிழக அரசு பற்றி மக்கள் ஏராளமான குற்றச்சாட்டுகளைக் கூறும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த புகாரை கூறி இருப்பது எப்படி என்று புரியவில்லை. மணல் கடத்தல், ஊழல் மற்றும் பண மோசடி போன்ற சட்டவிரோத செயல்களுக்கு கைப்பாவையாக செயல்படும் திமுக. அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கு வங்காளத்தில் உள்ள தனது நண்பர் ஆட்சி செய்து வருவதை போன்று இங்கும் மாற்றத்தை செய்ய விரும்புகிறார். இது போன்ற புகார் சொல்வதை நிறுத்துங்கள். ஆக்கப்பூர்வமான பணிகளை தொடங்குங்கள் என்று அவர் ஸ்டாலினைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்ணாமலை ஆங்கிலத்தில் வெளியிட்ட அந்தக் கேள்விகள் இவை…

Happen to read the long cry note written by Corrupt DMK Govt’s Chief Minister Thiru MK Stalin to our Hon President of India complaining about the functioning of the Governor.

Thiru MK Stalin seems to have forgotten that the Hon Governor is fulfilling the wants of his while he was the leader of the opposition.

Thiru MK Stalin complained while in opposition that the Governor is reading out a prepared statement in the assembly and asked the Governor to sack a minister on corruption charges but has problems with these today.

Corrupt DMK Govt’s CM Thiru MK Stalin complains of Governor disrupting the functioning of the elected government.

1. How is Governor refusing to accept GU Pope’s translation of Thirukural disrupting the functioning of the govt?

2. How does calling out missionaries for destroying the essence of Tamil literature disrupt the functioning of the govt?

3. Is the Hon Governor responsible for the delayed justice in Vengaivayal?

4. How should the Hon Governor react to the TN CM’s son & son-in-law earning 30,000 Crores in just a year thru corrupt means?

5. Should the Hon Governor remain a mute spectator to a Police officer accused of rigging passports is made the head of intelligence?

6. Has the Hon Governor stopped the Government from fulfilling its electoral promises? Why hasn’t the Corrupt DMK Govt not fulfilled its 90% promise even after 2 years?

7. Should the Hon Governor bury his conscience & read out a prepared lie in the assembly?

8. Is the Hon Governor responsible for the lawlessness in the State today?

9. Is the Hon Governor responsible for the illegal sand and gravel smuggling in the state today?

10. Is the Hon Governor responsible for the death of Govt officials who stopped sand smuggling?

11. Is the Hon Governor responsible for SCSP funds unutilised for 2 consecutive years?

12. Is the Hon Governor responsible for the Hooch deaths in the State?

13. Is the Hon Governor responsible for falling standards of education in the Govt schools?

14. Is the Hon Governor responsible for lockup deaths in the state & for lying in the assembly that nothing of that sort happened?

15. Is the Hon Governor responsible for the rampant corruption in every department of the TN Government?

16. Is the Hon Governor responsible for the hike in prices of essential commodities?

Can’t understand what Thiru MK Stalin is complaining about when the people of the State have a lot to complain about his Governance.

Thiru MK Stalin & the Corrupt DMK Govt is an acting puppet for Sand smugglers & Money launderers and has turned the state into one lawless jungle just like his friend in West Bengal.

Stop complaining & start delivering, Thiru MK Stalin.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe