
தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் ரத்னா, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி பேசினார். அப்போது உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவும் உடன் இருந்தார்.
டாஸ்மாக் கடைகளுக்கும், கடையில் வசூலான பணத்தை செலுத்தும் ஊழியருக்கும் பாதுகாப்பு தேவை. வங்கி ஊழியரே கடைக்குச் சென்று பணத்தைப் பெற்றுக்கொள்ளலாமா? என்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம். சென்னையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் அது செயல்படுத்தப்படும்.
மது விற்பனை செய்வது வருமானத்திற்கான நோக்கமல்ல. விற்பனையில் இலக்கு நிர்ணயிக்கப்படுவது, வருமானத்தை கூட்டுவதற்காக அல்ல. மது விற்பனை குறைந்தால் அதற்கு காரணம் என்ன? மது குடிப்பதை யாரும் நிறுத்தி இருக்கிறார்களா? அல்லது, மாற்றாக வேறு தவறான இடத்திற்கு செல்கிறார்களா? என்பதை கண்டறியவே இந்த இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
டாஸ்மாக் பாட்டில்களால் பல பிரச்னைகள் உள்ளன. கண்ட இடங்களிலும் அவை வீசப்பட்டு விடுகின்றன. எனவே மது பாட்டிலுக்கு பதிலாக ‘டெட்ரா பாக்கெட்’ வரவேண்டும் என்று பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். குறுகிய இடத்தில் அவற்றை வைக்கலாம். அவற்றை கையாள்வது எளிது. அதோடு உடைந்து நஷ்டம் ஏற்படுவது இருக்காது. எனவே அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. டெட்ரா பேக் மூலம் விற்பனை செய்து, அதை மறு சுழற்சியாக மீண்டும் பயன்படுத்தலாம்.
அதுபோல கடை திறக்கும் காலநேரம் பற்றி ஆய்வு செய்தபோது, காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை கட்டட வேலை போன்ற கடுமையான உடலுழைப்பு தேவைப்படும் வேலைக்குச் செல்பவர்கள் மது கிடைக்காமல் சிரமம் அடைகிறார்கள் என்று கண்டறிந்தோம். அவர்களுக்காக என்ன ஏற்பாட்டை செய்யலாம்? என்பதில் இன்னும் முடிவெடுக்கவில்லை.
உடலுக்கு நன்மை தரும் கள்ளை விற்பனை செய்வது பற்றி கேட்டால், விவசாயிகளை மனதில் வைத்து அதை செய்யலாம் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுகிறது என்பது மிக அருமையான விஷயம். விவசாயிகளின் நன்மை என்பதில் முதல்வருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் கள் விற்பனையில் ஈடுபட்ட மாநிலங்களில் பல பிரச்னைகள் எழுந்துள்ளன. அங்கு நடக்கும் தவறுகள் இங்கு வந்துவிடக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டியதுள்ளது.
இது பற்றி ஆய்வு செய்ய தனி கமிட்டியை நியமிக்க இருக்கிறோம். அதை ஒழுங்கு செய்த பிறகுதான் கள் விற்பனை பற்றி யோசிக்க முடியும். அந்த ஆய்வில், அந்த தவறுகளை கட்டுப்படுத்திவிட முடியும் என்று சொன்னால் அதுபற்றி சிந்திப்போம். முதலில் ஆய்வறிக்கை வரட்டும்.
எம்.ஆர்.பி. விலைக்கு கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளுக்கு அதுபற்றி வந்த தகவல் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மிகச்சில புகார்கள்தான் வந்தன… என்று கூறினார் அமைச்சர் முத்துசாமி.
ஆனால், அவரது இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அரசியல் மட்டத்தில் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பாமக தலைவர் ராமதாஸ் உள்பட பலரும் அரசின் இந்த மது விற்பனை முயற்சிக்கு கண்டனம் தெரிவித்ததுடன் கடும் விமர்சனங்களையும் முன் வைத்தனர்.
சமூகத்தலங்களில் அமைச்சர் முத்துசாமியின் பேச்சுக்கு விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்தன. அவற்றில் சில…
This Content Is Only For Subscribers
என்ன தவம் செய்தோம், முத்துசாமி அவர்களே ..
மது அருந்திவிட்டு வேலைக்கு போகிறார்களே என்ற நடப்பு நிலவரத்தை கேட்டவுடன் துடிதுடித்துப் போயிருக்கவேண்டும்.
இப்படி மதுவுக்கு அடிமையாகி போய்விட்ட ஒரு சமூகத்தை எப்படி மீட்டெடுக்க போகிறோம் என்ற கவலை வரவேண்டும், சமூக அக்கறையோடு அதற்கான திட்டங்களை பற்றி பேசி இருக்க வேண்டும்.
ஆனால் அவர்களுக்கு காலையிலேயே மதுவை எப்படி விநியோகிப்பது என்பதில் தான் அக்கறை காட்டுகிறார் நமது மாநிலத்தின் அமைச்சரான எஸ். முத்துசாமி அவர்கள்.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து பல சாதனைகளைப் படைத்தவர் முத்துசாமி.
கட்சி பேதம் இன்றி இப்படி ஒரு அமைச்சரா என்று தொழிற்சங்கத்தினரே வியக்கும் அளவுக்கு அனைவரையும் அரவணைத்து சென்று போக்குவரத்து கழகங்களை நடத்தியவர்.
அத்தகைய அனுபவமிக்க முத்துசாமி கடைசியில் மதுபான விநியோகத்தில் இப்படி எல்லாம் பேசுவது காலத்தின் அலங்கோலம் என்று சொல்வது தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடைகளை திறப்பது என்ற கோரிக்கை பற்றி பரிசீலனை என்று சொல்கிறார் அமைச்சர்.
அதைவிட கொடுமை பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு அவரின் பேச்சை ஆரவாரமாக ரசிக்கிறார் உள்துறை செயலாளரான அமுதா.
காலையிலேயே மது கடைகள் திறப்பு என்கிற விவகாரம் வரும்போது இங்கே எலைட் வாதம் ஒன்று முன் வரலாம்.
சர்வதேச விமானங்கள் இயங்கும் நகரங்களில், வெளிநாட்டினரின் நலனை கருதி சில ஹோட்டல்களில் 24 மணி நேரமும் பார் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேல் தட்டு மக்களுக்கு கிடைக்கும் அந்த சலுகை, ஏன் உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்று கேட்கலாம். பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள் என்று கூட பொங்கலாம்.
உலகம் முழுவதும் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பதற்குத் தான் மது அருந்துவார்கள்.
ஆனால் மது அருந்தி விட்டுத்தான் வேலைக்கே போக முடியும் என்ற நிலை உருவாகுமேயானால், அந்த நிலைப்பாட்டுக்கு உதவுவதில் என்ன தவறு என்று ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் போகுமேயானால்,
கேடுகாலம், வெகு தொலைவில் இல்லை, தமிழ்நாட்டுக்கும்தான்..
- ஏழுமலை வெங்கடேசன், மூத்த ஊடகவியலாளர்
சில கட்டுமான தொழிளாலர்கள் இதைப்போலத்தான் அண்ணா பாவம் விலை அதிகம் கொடுத்து வெளி மார்கெட்டில் வாங்கி குடித்துவிட்டுத்தான் செல்கின்றார்கள். பாவம் அவர்களுக்கு பணத்தை மிச்சப்படுத்த நடவடிக்கை எடுப்பதை போய் தப்பா நெனைக்கிறீங்களே (காலையில குடிச்சா தான் வேலை செய்யமுடியும் என்ற இழி நிலையில் சமுதாயம் பிறகு வடக்கன் வந்து வேலைவாய்ப்பை பரித்துவிட்டான் என்ற புலம்பல் (ஒருவேள உழைப்பிற்க்கு அதிக ஊதியம் வாங்குவதால் தான் இந்த நிலை போல பற்றாக்குறை பொருளாதாரத்தில் இருந்தா சரியா இருப்பாங்க போல)
டாஸ்மாக்ல அதிக வருமானம் என்பது கட்டிட thoழிலாளர்கள் தான் முதல் இடம் அடுத்து விவசாய கூலி அதற்கடுத்த இடம் தான் மற்றவர்களுக்கு சார். குடிபோதையில் தூங்கதான் செய்வார்கள் அல்லது கவிழ்ந்து கிடப்பார்கள் இப்படி இருந்தால் இவர்களின் குடும்பம் என்னாகும்? இதனால்தான் வேறு மாநில தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு ( பெரிய கட்டுமான நிறுவனங்கள் ,ஒப்பந்ததாரர்கள் உள்ளுர் ஆட்களை தவிர்க்கின்றார்கள்)
உயரமான இடத்தில் சாரம் கட்டி அதன் மேல் நின்று வேலை செய்யும் கட்டிட தொழிலாளி போதையில் இருந்தால் அவன் நிலை என்னாகும்? அவன் நிலைமை எதுன்னாலும் ஆகட்டும்…அவன் தவறி கீழே விழுந்தால், ஏற்கனவே சேமிப்பை கரைத்து அல்லது கடன் வாங்கி கட்டிடம் கட்டும், அவனை வேலைக்கு வைத்தவர் நிலைமை என்ன ஆகும்? அமுதா அம்மாவை பார்க்கிற போதுதான் கஷ்டமா இருந்ததது. பாவத்த…