
விழுப்புரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக சென்னையில் லண்டன், சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த விமானங்கள் சில தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன. 8 விமானங்கள் வானில் வட்டமடித்தபடி சில நிமிடங்கள் சுற்றின. பின்னர் அனுமதி கிடைத்ததும் தரையிறங்கின.
ஜெர்மனியில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 12 விமானங்கள் 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 12.07.2023 காலை 0830 மணி முதல் 13.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
BASL மணம்பூண்டி (விழுப்புரம்) 27;
RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்) 21;
BASL முகையூர் (விழுப்புரம்) 20;
RSCL-2 கேதார் (விழுப்புரம்) 15;
வேலூர் (வேலூர்) 9;
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 8;
BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 7;
மரக்காணம், விழுப்புரம், RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) தலா 6;
KCS மில் அரியலூர், திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) தலா 5;
காட்பாடி, அம்முண்டி (வேலூர்), தாம்பரம், செய்யூர் (செங்கல்பட்டு), Dscl மாதம்பூண்டி, Kcs மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), வானூர், RSCL-2 கஞ்சனூர், RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்) தலா 4;
பெண்ணாரம் (தர்மபுரி), ஆம்பூர் (திருப்பத்தூர்), பணப்பாக்கம், ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜா (இராணிப்பேட்டை), புழல் ARG (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம், NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை) மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), KVK காட்டுப்பாக்கம் ARG, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), செஞ்சி, RSCL-2 நேமூர், RSCL-3 வளத்தி, RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), KCS மில்-1 கடவனூர், DSCL திருப்பாலப்பந்தல், அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி) தலா 3;
தர்மபுரி PTO (தர்மபுரி), பொன்னை அணை (வேலூர்), அம்மூர் (வாலாஜா ரயில்வே), காவேரிப்பாக்கம், சோளிங்கர், பாலாறு அணைக்கட்டு, கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), சோழிங்கநல்லூர், சென்னை மீனம்பாக்கம், ஆலந்தூர் (சென்னை), கேளம்பாக்கம், மதுராந்தகம், திருப்போரூர், தாம்பரம் SIT ARG மேற்கு (செங்கல்பட்டு), வாலாஜாபாத், காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), ஆரணி, தண்டராம்பேட்டை, கீழ்பென்னாத்தூர், சேத்பேட்டை (திருவண்ணாமலை), RSCL வல்லம் (விழுப்புரம்), புதுச்சேரி (புதுச்சேரி), கல்லிக்குடி, தனியாமங்கலம், திருமங்கலம் (மதுரை), மானாமங்கலம் (மதுரை), பந்தலூர், கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி) தலா 2;
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), குடியாத்தம் (வேலூர்), மின்னல் (இராணிப்பேட்டை), பூந்தமல்லி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழக ARG, சென்னை நுங்கம்பாக்கம், ஒய்எம்சிஏ நந்தனம் ARG (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் (காஞ்சிபுரம்), RSCL-3 செம்மேடு, திண்டிவனம் (விழுப்புரம்), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), ஆண்டிபட்டி, வாடிப்பட்டி (மதுரை), காரியாபட்டி, விருதுநகர் (விருதுநகர்), அழகரை எஸ்டேட், பார்வூட் (நீலகிரி) தலா 1.