ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை..

Published:

IMG 20230714 WA0090 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா முக்கிய நிகழ்வாக திருதேரோட்டம் நாளை நடக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது. விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா தேரோட்டம் நாளை சனிக்கிழமை நடக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைணவ ஸ்தலங்களிவல் முக்கிய தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த தலம் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.

கடந்த 18-ந்தேதி 5 கருட சேவை நடைபெற்றது. நேற்று 7-ம் திருவிழாவையொட்டி இரவில் ஆண்டாள்-ரெங்கமன்னார் சயன சேவை நடைபெற்றது. மேலும் திருவிழாவையொட்டி ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளைசனிக்கிழமை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள்- ரெங்க மன்னார் க்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்கின்றனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பக்தர்கள் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கின்றனர். தேர் செல்லும் பாதை தேரோட்டத்தையொட்டி நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தேர் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தேரின் சக்கரங்கள் சீராக செல்லும் வகையில் திருச்சி பெல் நிறுவன அதிகாரிகள் குழுவினர் சரி செய்துள்ளனர். மேலும் தேர் வேகமாக நகரும்போது பிரேக் பிடித்து நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர் சக்கரங்கள் பதியாமல் இருக்க ரதவீதிகளில் பல இடங்களில் ராட்சத இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டுள்ளன. தேரின் பின்புறம் இருந்து தள்ளுவதற்கு வேளாண்மை துறை சார்பில் பொக்லைன் எந்திரங்களும் வரழைக்கப்பட்டுள்ளன.

தேர் திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் அதிகாரிகள் செய்துள்ளளனர்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img