சென்னை: சென்னை விமான நிலையத்தில் மும்பை செல்லும் விமானத்தில் பயணிக்கக் காத்தி ருந்த அமெரிக்க இளைஞர் ஒருவர் வைத்திருந்த சாட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானம் ஞாயிற்றுக்கிழமை கிளம்பத் தயாரானது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்பவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் என்ற இளைஞரைச் சோதனை செய்த போது, அவரிடம் ஒரு சாட்டிலைட் போன் சிக்கியது. இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, தான் அமெரிக்காவில் சாட்டிலைட் போனை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் டேவிட்டின் போனை பறிமுதல் செய்தனர். டேவிட்டுக்கு குற்றப் பின்னணி ஏதாவது உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் அமெரிக்க இளைஞரிடம் சாட்டிலைட் போன் பறிமுதல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari