பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தில் சர்ச்: ஹிந்து முன்னணி கண்டனம்!

hindumunnani - 2026

பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச்- கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்களை மிரட்டும் காவல்துறையினர் அராஜகத்தைக் கண்டிப்பதாக, இந்துமுன்னணி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை:

தென்காசி மாவட்டம் வி.கே புதூர் தாலுகா அச்சங்குன்றம் கிராமத்தில் TDTA கிறிஸ்தவ பள்ளி இயங்கி வந்த நிலையில் அந்தப் பள்ளிக்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பல ஆண்டுகளாக பழைய பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தை தென்காசி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் திடீரென இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருத்தம் செய்து அங்கு கிறிஸ்தவ சர்ச் என்று பதிவு செய்துள்ளனர்.

கடந்த 25.3.2023 அன்று திடீரென எந்தவித அனுமதியும் பெறாமல் நடைபெற்ற சர்ச் கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்களை காவல்துறையினர் மூலம் கைது செய்து ஒரு கோவில் வளாகத்தில் மாலை வரை அடைத்து வைத்திருந்தனர். ஊர் மக்கள் அனைவரும் 3.4.2023-ல் தங்கள் ஊருக்கு TDTA கிறிஸ்தவ பள்ளி வேண்டாம் எனவும் தனியாக அரசுப் பள்ளிக்கூடம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதன்படி 14 .4. 2023 அன்று TDTA பள்ளியில் படித்த மாணவர்கள் வேறு அரசு பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. அதேசமயம் அச்சங்குன்றம் பகுதியில் பள்ளிக்கூடம் அமைக்க தேவையான இடத்தை ஊர் மக்கள் தமிழக ஆளுநர் பெயரில் பத்திரபதிவு செய்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தங்கள் ஊரில் பள்ளிக்கூடம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டி அச்சங்குன்றம் கிராம மக்களும், குழந்தைகளும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்தனர்.

ஆனால் சிறுபான்மையினர் நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் தூண்டுதல் காரணமாக நேற்றைய தினம் அச்சங்குன்றம் ஊர் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாதபடி காவல்துறையினர் மூலம் தடுக்கப்பட்டுளனர்.

பள்ளி மாணவர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமையாகும் அதனை தடுக்கும் விதத்தில் செயல்படும் தென்காசி மாவட்டம் ஆட்சியரையும், காவல்துறையினரையும் இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories