
மதுரை: மதுரையிலிருந்து நாளை முதல் கோவா விமான சேவை, மேலும், வரும் 10-ஆம் தேதி முதல் ஹைதராபாத் – மதுரை – கொழும்பு விமான சேவையும் இயக்குவதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை இண்டிகோ., ஸ்பைஸ்ஜெட்., ஏர்இந்தியா ஆகிய 3 விமான நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து சேவை வழங்கி வருகிறது.
இதில், உள்நாட்டு., வெளிநாட்டு சேவையாக ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர்இந்தியா விமான நிறுவனங்கள் சேவைகளாக வழங்கி வந்தது. இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டு சேவை வழங்கி வந்தது. இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கொரோனாவிற்கு பிறகு வெளிநாட்டு சேவை மட்டுமே வழங்கி வந்த நிலையில்., தற்போது மீண்டும் மதுரையில் இருந்து சென்னைக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.
மேலும்., அதோடு சென்னை வழியாக கோவா செல்வதற்கு விமான சேவை நடத்த தற்போது திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 8ஆம் தேதி முதல் SG-2981 விமானம் மதுரையிலிருந்து 12.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்று சென்னையில் இருந்து கோவாவிற்கு மாலை 4-மணிக்கு சென்றடையும். பின்னர், அங்கிருந்து SG-2983 விமானம் கோவாவில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்து., சென்னையில் இருந்து இரவு 8:10 மணிக்கு மதுரை வந்தடையும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 10-ம்தேதி முதல் 19ம் வரை SG-2705 விமானம் ஹைதராபாத்திலிருந்து தினமும் காலை 10.35 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு பகல் 12.15 மணிக்கு வந்தடையும்.பின்னர் அதே விமானம் SG-03 யாக மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு 2.25 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
அதே போல் SG-04 விமானமாக கொழும்புலிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்து. பின்னர், மதுரையில் இருந்து SG-2701 விமானமாக மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும் என, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணிகள் ஆதரவை பொறுத்து இதே நிலை நீடிக்கும் என ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.