ஜனநாயக கூட்டணியிலிருந்து இதுவரை அழைப்பு வரவில்லை: ஒபிஎஸ்!

ops interview at madurai copy - 2026
#image_title

மதுரை: காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்,காவிரி நதிநீர் ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றின் தீர்ப்பை செயல்படுத்தமல், கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்று ஓபிஎஸ்., செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

சென்னையில், இருந்து பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

கர்நாடக அரசு அனைத்து கட்சி தீர்மானம் குறித்த கேள்விக்கு:
உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமும், காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வது சட்டவிரோதம். காவேரி பிரச்சனையை தீர்ப்பதற்கு தான் காவிரி நடுவர் மன்றம் நிறுவப்பட்டது.

17 ஆண்டுகளுக்குப் பின்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு வந்த பிறகு அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா இந்த நீர் பத்தாது, அப்போது திமுக ஆட்சி நடைபெற்றது நீரை உறுதிப்படுத்த வேண்டும் அதன் பின்பு இந்த நீர் பற்றாது என்று உச்ச நீதிமன்றத்தின் வழக்கு தொடுக்க வேண்டும் என்று அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தி இருந்தார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்று துரைமுருகன் தெரிவித்தார். ஆனால், அதன்பின் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதில் மற்ற மாநிலங்களுக்கு வழங்கிய நீரை குறைத்து பெங்களூருக்கு கூடுதலாக நீர் வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு வழக்கு தொடுத்து 172 டிஎம்சி நீர் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை உறுதிப்படுத்த காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

காவிரி நடுவர் மன்றம் இது இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெறுவதற்கு உரிய முன்ன நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு, அதிமுக ஆட்சியில் தான் உச்சநீதிமன்றம் எடுத்த சென்று 10 தேர்வு மூலமாக இறுதி தீர்புக்கு அரசாணை பெற்று தந்தார். காவிரி நீர் முறைப்படுத்தும் ஆணையம் அமைக்க வேண்டும் அப்போது ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அதனையும் உச்ச நீதிமன்றம் எடுத்துச் சென்றார்.

அதன் பிறகு காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்து நீண்ட நெடிய வரலாறு உள்ளது. போராடி பெற்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்ற கர்நாடக அரசு சொன்னால், இந்திய அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் தமிழக மக்களால் இருக்கிறார்கள்.

திமுக அரசு இதை முறையான சட்டப் பிரச்சனை மூலமாகவோ அல்லது பேச்சு வார்த்தை மூலமாகவோ துரித நடவடிக்கை எடுத்து அம்மா பெற்று தந்த நீரை தர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக உள்ளது.

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு:
இதுவரை இல்லை. என்றார்.

சசிகலாவை சந்திப்பது குறித்த கேள்விக்கு:
இதுவரை பார்க்கவில்லை, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

புரட்சிப் பயணம் மீண்டும் துவங்குவது குறித்த கேள்விக்கு:
மீண்டும் தொடரும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories