இலங்கை விமானம் ரத்து; பயணிகள் அவதி!

crime scene - 2026

விமானம் இரத்தானதால் பயணிகள் அவதி!

மதுரை: இலங்கையில் இருந்து வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்தானதால், மதுரையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய 189 பயணிகள் தவிப்பு.
மாற்று ஏற்பாடாக நாளை இலங்கையில் இருந்து மதுரை வரும் விமான மூலம் மீண்டும் இலங்கை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

மதுரையில் இருந்து இலங்கையில் இருந்து மதுரை வரவேண்டிய லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால், இலங்கையில் இருந்து விமானம் மதுரை வரவில்லை. மேலும், மதுரையில் இருந்து இலங்கை செல்ல காத்திருந்த 189 பயணிகள் மீண்டும் விமானம் மூலம் இலங்கை செல்ல நாளை வருமாறு அறிவுறுத்தி பயணிகளை திருப்பி அனுப்பி உள்ளனர.

திருவில்லிபுத்தூர் மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து…

தீயை அணைக்க முயன்ற காவலாளி மூச்சுத்திணறி பலி…..

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், அய்யம்பட்டி தேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (60). இவர் அதே பகுதியில் உள்ள மரம் அறுக்கும் மில்லில், இரவு நேரக் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இன்று அதிகாலை நேரத்தில், மில்லில் அறுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மரக்குவியலில் திடீரென்று தீப்பிடித்தது. இதனை பார்த்த பெரியகருப்பன், தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். தீ விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அதிகாரி முத்துச்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயை அணைக்கும் போது ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கிய பெரியகருப்பன் மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை சோதனை

திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள, பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில்
2-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல்லில் கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் போலீசை தாக்கி தப்பி ஓட்டம்:

திண்டுக்கல்: தேனியில் இருந்து, திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு செம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையின் போது, தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அந்த காரில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, காரில் வந்த கம்பத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (25), நவீன்குமார் (30), பாண்டீஸ்வரன் (28) ஆகிய 3 பேரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக 3 பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது, சதீஸ்குமார் என்பவர் தப்பி ஓடினார்.

பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்த போலீஸ் நாகலிங்கம் (35) என்பவர் தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கி கீழே தள்ளி விட்டு ஓடினார். இதில், நாகலிங்கம் படுகாயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட மற்ற 2 பேர்களான நவீன்குமார் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு சிறையில்  அடைக்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories