12 ஆண்டுக்குப் பின் வந்த சங்கு; திருக்கழுக் குன்றத்தில் குவிந்த பக்தர்கள்!

thirukkazhukundram sangu - 2026

12 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கையாக வரும் சங்கு தென்பட்டதை அடுத்து, அதை தரிசிக்க அன்பர்கள் ஏராளமானோர் திருக்கழுக்குன்றத்தில் குவிந்தனர்.

செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கழுக்குன்றம், அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பிகா ஸமேத ஸ்ரீ வேதகிரீஸ்வர ஸ்வாமி ஆலயத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தகரையில் இயற்கையான முறையில் தோன்றும் சங்கை கொண்டுதான் வேதாச்சலபதிக்கு சங்குகாபிஷேகம் நடத்துவார்கள்.

மகரிஷி மார்கண்டேயர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாத நிலையில், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி பெருமானை வணங்கினார். அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியது. அதை பெருமானே தனது வழிபாட்டுக்கு வழங்கியதாக எண்ணி மகரிஷியும் வழிபட்டார். இதனால் இந்தக் குளத்துக்கு சங்கு தீர்த்தக் குளம் என பெயர் ஏற்பட்டது.

இதுவரை மார்க்கண்டேயர் காலம் தொட்டு இந்த சங்கு பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறது அவ்வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பெடுத்த சங்கு 2024 ஆம் ஆண்டு பனிரெண்டு ஆண்டுகள் முடிய நேற்று சங்கு தீர்த்தகரையில் தென்பட்டுள்ளது. இந்த சங்கு சுத்தம் செய்யப்பட்டு பார்வையாளர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும். பின்னர் பழைய சங்குகளுடன் இணைக்கப்பட்டு வேதாசலபதியின் பிரத்யேக சங்காபிஷேக விழாவில் பயன்படுத்தப்படும்

திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்தக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும். இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும். இதனைக் கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.

சங்கு தீர்த்தக் குளத்தில் கடந்த 2011ம் ஆண்டு செப்.1 அன்று, புதிய சங்கு வெளியே வந்தது. இதன் பின்னர் 12 வருடங்கள் காத்திருந்து, தற்போது சங்கு தீர்த்தக் குளத்தில் புதிய சங்கு வரும் என பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரையில் ஒதுங்கியது. இதனைக் கண்ட பக்தர்கள் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். .

இந்நிலையில், புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அதனைக் காணக் குவிந்தனர். சங்கைப் பார்த்து பக்தியுடன் வழிபட்டனர். பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத் தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்கு தீர்த்தக் குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இதுவரை 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories