ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
நாளை (ஏப்., 19) தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. நாடு முழுவதும் பல கட்ட தேர்தல் முடிந்து வரும் ஜூன் 4 ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி தே.ஜ., கூட்டணி அனைத்து வேட்பாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல என்பதை இந்த கடிதம் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியின் கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு மக்கள் பல தரப்பினரும் பட்ட கஷ்டங்கள் ஏராளம். கடந்த 10 ஆண்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரும் பலன் பெற்றுள்ளனர். ஆனாலும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் எங்கள் பணியில் இந்த தேர்தல் திடமாக இருக்கும்.
2047 க்குள் வளர்ந்த தேசமாக
பா.ஜ.க., மற்றும் நமது கூட்டணி பெறும் ஒவ்வாரு ஒட்டும் நிலையான அரசை அமைப்பதற்கும், 2047 ல் இந்தியா வளர்ந்த நாடாக அமைக்க நாம் செல்லும் பயணத்திற்கு நல்ல ஊக்கத்தை தரும். இந்த முக்கியமான தருணத்தில் நான் கேட்டு கொள்வது என்னவென்றால், தேர்தல் முடியும் கடைசி தருணம் வரை நாம் ஊக்கமாக உழைக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களின் மற்றும் உங்களை சுற்றியுள்ள நபர்களின் உடல் நலத்தையும் பேணி காத்திட வேண்டும். கோடை காலம் என்பதால் பெரும் சிரமங்கள் இருக்கும்.
இந்த தேர்தல் நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, வெப்பம் தொடங்கும் முன், அதிகாலையில் வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பாஜகவின் வேட்பாளராக, எனது காலத்தின் ஒவ்வொரு தருணமும் எனது சக குடிமக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . இது சாதாரண தேர்தல் அல்ல நாட்டின் முன்னேற்றத்திற்கான தேர்தல். பிரகாசமான எதிர்காலத்துடன் இணைக்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராதிகா சரத்குமாருக்கு…
பெண் சக்தியின் தாக்கத்தை அனைவரின் மனதிலும் எடுத்துச் சென்றுள்ளீர்கள் என விருதுநகர் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்ரல் 17) விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகாசரத்குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ராம நவமி நன்னாளில் இக்கடிதத்தை எழுதுவதில் மகிழ்கிறேன். தாங்கள் நலம் என நம்புகிறேன். உங்கள் கலையுலக பயணம் பல லட்சம் ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. நீங்கள் அரசியல் வாயிலாக மக்கள் சேவைக் கு தங்களை அர்ப்பணித்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கலை, கலாச்சார மற்றும் சமூக சேவையில் உங்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு விருதுநகர் மக்களின் மகத்தான அன்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.
பெண் சக்தியின் தாக்கத்தை அனைவரின் மனதிலும் எடுத்துச் சென்றுள்ளீர்கள் . மக்களின் ஆசிர்வாதத்துடன் தாங்கள் நாடாளுமன்றத்தில் சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்பட போகிறீர்கள் என நம்புகிறேன். உங்களைப் போன்ற குழு உறுப்பினர்கள் எனக்கு மிகப்பெரிய சொத்து. நம் சக் தி முழுவதையும் மக்களின் சேவை க்காகவும், நாட்டிற்காகவும், உங்கள் தொகுதிக்காகவும் முழுமையாக பயன்படுத்துவோம். இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல , இந்தியாவில் உள்ள குடும்பங்கள் , முக்கியமாக வயதில் மூத்தவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் அனுபவித்த இன்னல்களை நினைவுகூர்வார்கள் .
அதேசமயம், கடந்த 10 ஆண்டுகள் அதை மறக்கடிக்கும் வகையில் அனை த்து தரப்பிலும் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது, துன்பங்கள் அகன்றிருக்கிறது என்பதை இக்கடிதம் மூலம் தங்கள் தொகுதி மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், செய்து முடிக்க இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன. இவைகளை எல்லாம், உறுதியாக களைந்தெடுத்து, மக்கள் நிம்மதியாக இருப்பதை உறுதி செய்வதே நமது நோக்கம். இந்த தேர்தல் நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் இணைக்கின்ற ஒரு வாய்ப்பு என்றே சொல்லாம்.
பாஜகவின் ஒவ்வொரு வாக்கும், ஒரு நிலையான, உறுதியான, நேர்மையான அரசமைக்கவும் 2047இல் முன்னேற்றமடைந்த நாட்டிற்கான பயணத்தின் அஸ்திவாரமாகவும் அமை யும். இந்த முக்கியமான தருணத்தில், நம் ஒவ்வொரு தொண்டர்களும் இந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்தை சிறப்பாக பயன்படுத்துவோம்.
அதேநேரத்தில், உங்கள் உடல் நலத்திலும், உங்களின் சகாக்களின் உடல்நலத்திலும் அக்கறையோடு இருங்கள். கோடை வெயிலின் தாக்கம் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன். ஆனால், இந்தத் தேர்தல் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கான மிகவும் முக்கியமான தேர்தல். ஆகவே , வாக்காளர்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பாக காலையிலேயே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான நீங்கள் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் என் உறுதிமொழியை , என் ஒவ்வொரு மணித் துளியும் நாட்டின் நலனுக்காக, நாட்டு மக்களின் நலனுக்காக என்பதை அறிவுறுத்துங்கள் .
உங்கள் வெற்றிக்காக என் வாழ்த்துகள். 2047இல் நம் முன்னேற்றமடைந்த நாட்டை உருவாக்க நாம் 24/7 பணி செய்வோம் என்பது இந்த மோடியின் உத்தரவாதம். இவ்வாறு பிரதமர் மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .
ஏ.பி. முருகானந்தத்துக்கு…
திருப்பூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம்.
பாஜக இளை ஞர் அணி பொறுப்பில் இருந்து அயராது கட்சிப் பணிகளில் ஈடுபட்டு, திருப்பூரின் பெருமையை உயர்த்தியுள்ளீர்கள் . மக்களின் ஆசியுடன் நாடாளுமன்றத்தை அடை வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற சக குழு உறுப்பினர்கள் எனக்கு பெரும் சொத்து. பாஜக பெறும் ஒவ்வொரு வாக்கும் நிலையான அரசை அமை ப்பதை நோக் கிச் செ ன்று, 2047க்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான நமது பயணத்தில் வே கத்தை அளிக்கும். தேர்தலில் வெ ற்றி பெற எனது வாழ்த்துகள்.
பாரிவேந்தருக்கு …
மக்களின் ஆசியுடன் நாடாளுமன்றத்தில் அமர்வீர்கள் ; உங்களைபோன்றவர்கள்தான் என் சொத்து. சமூகப் பணிகளால் மக்களை கவர்ந்துவிட்ட தாக பெரம்பலூர் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தருக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில் பாராட்டு.