ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அமாவாசை தினமான இன்று விருதுநகர், மதுரை ,திருச்சி , திண்டுக்கல் , சென்னை கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர்.
பின்பு காலை 6 மணிக்கு மலைப்பாதையின் நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
மலையில் எழுந்தருளிய சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி கோயில் சுந்தரமூர்த்தி கோவில்களில் மாலை 4 மணி முதல் அமாவாசை வழிபாடு தொடங்கியது மூன்று கோவில்களிலும் சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரத்திற்கு பின் சங்கு ஒலி முழங்க சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது பக்தர்கள் இரவு முழுவதும் விடிய விடிய பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர்.