ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது மழை பெய்ததால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கோப்பையைப் பகிர்ந்துகொண்டுள்ளன.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன. இந்நிலையில் நேற்று இரவு மஸ்கட்டில் இறுதிப் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அங்கு மழை பெய்ததால் ஆட்டம் 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது.