செங்கோட்டையில் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ விழிப்புணா்வு முகாம்
செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மோகன்தாஸ் இயற்கை யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி
நிலையம் சார்பில் மனிதநேய பண்பாளா் தெய்வத்திரு செண்பகம் கரையாளா் பிறந்த நாளை முன்னிட்டு இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு காந்தியத் தலைவா் வி.விவேகானந்தன் தலைமை தாங்கினார். டாக்டர் ராம்குமார், தாயின்மடியில் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கோமதிநாயகம், அசிசி பல் மருத்துவமனை டாக்டர் ஏகலைவன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
டாக்டர் கௌதம் செண்பக் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து காந்தியத்தலைவா் வி.விவேகானந்தன் குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
முகாமில் மருத்துவர்கள் டாக்டர் முத்துராஜ், சங்கமித்ரா, பார்த்திபன் மற்றும்
குழுவினா் மருத்துவ சிகி்ச்சை மற்றும் இயற்கை ஊட்டசத்து பானங்கள், இயற்கை உணவு, யோகா பயிற்சி ஆலோசனை வழங்கினா்.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளா் ராம்மோகன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஆலங்குளம் செல்வராஜ், கடையம் யூனியன் கவுன்சிலர் மாரிக்குமார், மத்தளம்பாறை ஜேம்ஸ், தென்காசி ஜோதிடர் மாடசாமி, பணிநிறைவு பெற்ற பிடிஓ. சண்முகசுந்தரம், கடையநல்லுார் யூசூப் அரசியல் பிரமுகா்கள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முகாமில் கழிவு நீக்கம், நீராவிக் குளியல், நீர்சிகிச்சை, மண்சிகிச்சை, காந்த சிகிச்சை, அக்குபஞ்சர், வாழை இலைக்குளியல், யோகா & தியான பயிற்சி இயற்கை ஊட்டச்சத்து பானங்கள், இயற்கை உணவுகள் உள்ளிட்டவைகள்
வழங்கப்பட்டது.
முகாமில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை
மற்றும் ஆலோசனை பெற்று சென்றனா். முடிவில் பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் நன்றி கூறினார்.