தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடந்து வரும் நிலையில் முக்கிய விழாவான சூரசம்ஹாரம் நாளை 7.11.24 வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு முறைமைகள் அதிகப் படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளிலும் கந்தசஷ்டி விழா நடைபெற்றாலும் சூரசம்ஹாரம் எனும் நிறைவுப்பகுதி திருச்செந்தூரில்தான் விசேஷமாக நடைபெறுகிறது.
அறுபடை வீட்டில் சூரசம்ஹாரம் நடக்காத இடம் திருத்தணிகை. முருகப்பெருமான் சினம் தணிந்து அருளும் இடம் என்பதால் மற்ற தலங்களில் நடப்பது போல கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் இங்கே நடைபெறுவது இல்லை.
கந்த சஷ்டி ஐதீக விழாவாகவே இங்கே கொண்டாடப்படுகிறது. ஆனால் திருச்செந்தூரில் கடற்கரையில் இந்த விழாதான் அதிமுக்கியம்.இந்த ஆண்டு 7.11.2024 அன்று மாலை 4.15 மணி முதல் 6.00 மணிக்குள் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மஹா சூரன், சிங்கமுகன், பானு கோபன், சூரபத்மன் ஆகிய அரக்கர்களின் பெரிய உருவங்கள் கடற்கரையில் நிற்கும்.
வீரபாகு மற்றும் பாலசுப்பிரமணியர் மற்றும் கல்யாண சுப்ரமணியர் ஆகியோரின் திருவுருவங்கள் தனித்தனி தேர்களில் கொண்டு செல்லப்படும்.சூரபத்மன் என்ற அரக்கனின் முழுப் போரும் இறுதி வீழ்ச்சியும் இயற்றப்படும்.
இந்த சடங்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடிக்கும். பக்தர்கள் அமைதியுடனும், வசதியுடனும் இத்திருவிழாவைக் கண்டு தரிசிப்பார்கள். அன்று கடலே சற்று உள்வாங்குவதோடு சிவப்பு நிறத்தோடு காட்சி தருவதும் உண்டு.இந்த சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்தில் ஆண்டவர் எதிரே கண்ணாடி வைத்து கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும். இதற்கு சாயா அபிஷேகம் என்று பெயர்.
கந்த சஷ்டி விரதமிருந்து இந்த சூரசம்ஹார விழாவை நினைத்தாலும் தரிசித்தாலும் நம் அசுர எண்ணங்கள் மாயும். அகம் சிறக்கும். நல்வாழ்வு பிறக்கும்.
திருச்செந்தூரில் சூரசம்கார விழாவை காண வரும் பக்தர்கள் வசதிக்காக திருநெல்வேலி நாகர்கோவில் மதுரை தென்காசி உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பசுக்களை இயக்குகிறது இது போல் தென்னக ரயில்வே தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கும் வியாழக்கிழமை மாலை திருச்செந்தூரில் இருந்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் சிறப்பு முறையில் இயக்குகிறது
பக்தர்களின் வசதிக்காக மேலும் கூடுதல் ரயில்களை திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கும் திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கும் பயணிகள் ரயில் இயக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்