தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர்.
இந்த நிலையில், சேவா பாரதி தென் தமிழ்நாடு அமைப்பு தொடங்கி, பல்வேறு சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சேவையின் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி அமைப்பின் சார்பில் புதிய வீடுகள் கட்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் புதிய வீடுகளை அந்தக் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் திரு.மாசாண முத்து (Ex) IPS அவர்கள் தலைமை தாங்கினார் , சிறப்பு அழைப்பாளராக ZOHO Foundation நிறுவனத்தின் CEO பத்மஸ்ரீ திரு. ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் சிறப்புரை அகில பாரத சக சேவா பரமுக் திரு. அ. செந்தில் குமார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தென் பாரத தலைவர் திரு. இரா. வன்னியராஜன் ஆகியோர் வழங்கினர்.
அத்துடன், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் திரு. ஹரிகிருஷ்ணகுமார், RSB அகில பாரத பொறுப்பாளர் திரு. பத்மகுமார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக அமைப்பாளர் திரு. ஆறுமுகம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சேவா பாரதி அமைப்பின் இந்த முயற்சி, கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வினை மீட்டெடுக்க உதவியாக அமைந்துள்ளது.