பிரதமர் மோடி, அண்ணாமலையை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்டவரை கைது செய்க: பாஜக., ஆர்ப்பாட்டம்!

madurai bjp protest - 2026

பிரதமர் மோடி, அண்ணாமலையை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்ட பசும்பொன் பாண்டியனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடி குறித்தும் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை குறித்தும் தவறாக பேசி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியையும் பாஜக தலைவர் அண்ணாமலையும் தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பசும்பொன் பாண்டியனை, காவல்துறை
இதுவரை கைது செய்யவில்லை. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம் தலைமையில் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பசும்பொன் பாண்டியனை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனைத்
தொடர்ந்து, திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட பசும்பொன் பாண்டியனை உடனடியாக கைது செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் பாஜக தொண்டர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மேற்கு மாவட்டத்
தலைவர் சிவலிங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் குறித்துபேசினால் உடனடியாக கைது நடவடிக்கையில் ஈடுபடும் தமிழக காவல்துறை பாரதப் பிரதமரையும் பாஜக தலைவரின் தவறாக சித்தரித்துவீடியோ வெளியிட்டு தொடர்பாக காலையிலேயே புகார் அளித்தும்
இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே, பிரதமர் குறித்து தவறாக வீடியோ வெளியிட்ட அந்த நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, திமுகவினரும் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் அனைத்து மொழிகளையும் கற்பிக்கிறார்கள் ஆனால் மற்ற யாரும் ஹிந்தி கற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக திமுக.,வினர் எதிர்க்கிறார்கள் என, தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், துணைத் தலைவர் சரவணகுமார், மாவட்ட பொதுச்
செயலாளர் பாரதிராஜா, மாவட்டச் செயலாளர்கள் தமிழ்மணி, சின்னச்சாமி, இளையராஜா, நகர தலைவர் சசிகுமார் உடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories