ஜெனகை மாரியம்மன் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

janagai mariamman temple utsav kodiyetram - 2026

மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டம் வரும் ஜூன். 17ஆம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருவிழா நடைபெறுவதை ஒட்டி, கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது . கொடியேற்றத்துக்கு முன்பாக சிறப்பு யாகம் நடைபெற்றது.

அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தார். அதனைத் தொடர்ந்து, கொடியேற்றத்திற்கான பூஜை பொருட்களுடன் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கூடியிருந்த பொதுமக்கள் பக்தர்கள் பெண்கள் அருள் வந்து ஆடினர். கொடியேற்றத்தை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்ட தொடங்கினர் நேற்று இரவு 12 மணி வரை சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பால்குடம் அக்னிச்சட்டி பூக்குழி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களுக்காக காப்பு கட்டினர் .

திருவிழா நடைபெறும் காலங்களில் சோழவந்தானில் போக்குவரத்தை ஒருவழிப்பதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான் அரசு போக்குவரத்து கழகம் பல வழித்தடங்களில் பஸ்சை இயக்குவதை காரணம் இல்லாமல் நிறுத்தி விடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மதுரை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் தனி கவனம் செலுத்தி, சோழவந்தான் அரசு போக்குவரத்து கழக பஸ்களை உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories