
செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் சேவையில் இந்த மாதமும் பராமரிப்புப் பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மதுரை – செங்கோட்டை மற்றும் திண்டுக்கல் – மயிலாடுதுறை இரு ரயில்களும் இணைக்கப்பட்டு மயிலாடுதுறை – செங்கோட்டை – மயிலாடுதுறை இடையே விரைவு ரயில் என இயக்கப்படும் நாள் முதல் அவ்வப்போது இந்த ரயிலானது பெரும்பாலான நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை காரைக்குடி வழித்தடத்திலேயே செல்கிறது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பொதுவாக செங்கோட்டை, ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேரடியாக காலை நேரத்தில் மதுரை, திண்டுக்கல். திருச்சிக்கு செல்ல இந்த ரயில் நேரடி ரயிலாக இருக்கும்போது இந்த ரயில் அடிக்கடி தடம் மாற்றி இயக்கப்படுவது ரயில் பயணங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக வண்டி எண்: 16847/48 மயிலாடுதுறை – செங்கோட்டை – மயிலாடுதுறை இந்த மாதம் நாளை 04.06.2025 முதல் 30.06.2025 வரை சில தினங்களுக்கு மாற்று பாதையில் திருச்சி – காரைக்குடி – மானாமதுரை – விருதுநகர் வழியாக இயங்கும் என்கிறது ரயில்வே அறிவிப்பு.
வண்டி எண் 16847 மயிலாடுதுறையில் காலை 12.10 மணிக்கு புறப்பட்டு -மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரயிலானது வருகிற 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை புதன் & ஞாயிறு கிழமைகளில் மட்டும் மாற்று பாதை திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி மானாமதுரை அருப்புக்கோட்டை வழியாக இயங்கும். இந்த நாட்களில் திண்டுக்கல் மதுரை செல்லாது மற்ற நாட்களில் வழக்கம்போல் திண்டுக்கல் மதுரை வழியாக செல்லும்.
வண்டி எண் 16848 செங்கோட்டையில் காலை 6.55 மணிக்கு புறப்பட்டு – மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வியாழன் & ஞாயிறு கிழமைகள் மதுரை திண்டுக்கல் திருச்சி வழியாகவும் மீதம் உள்ள மற்ற அனைத்து நாட்களும் மாற்று பாதையான மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி வழியாக இயங்கும்
திண்டுக்கல் மதுரைக்கு பயணம் மேற்கொள்வோர் முன்கூட்டியே இந்த தகவல்களை தெரிந்து கொண்டு திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.
பொதுவாக மதுரை செங்கோட்டை திண்டுக்கல் மயிலாடுதுறை இரு ரயில்களும் இணைக்கப்பட்டு மயிலாடுதுறை செங்கோட்டை மயிலாடுதுறை இடையே விரைவு ரயில் முன்பாக இயக்கப்படும் நாள் முதல் அவ்வப்போது இந்த ரயிலானது பெரும்பாலான நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை காரைக்குடி வழித்தடத்திலேயே செல்கிறது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
செங்கோட்டை ராஜபாளையம் தென்காசி சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள், காலை நேரத்தில் அலுவலகம், வணிக ரீதியில் கடைகளுக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக மதுரைக்கு இந்த ரயிலில் காலை நேரத்தில் அதிகளவில் பயணித்தனர். இது எக்ஸ்பிரஸாக மாறி, பின்னாளில் பெட்டிகள் குறைக்கப்பட்டு, மதுரை செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். தொங்கிக் கொண்டு, நிற்கக் கூட இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மதுரைக்கே இந்த ரயில் போகாது எனும் நிலை அண்மைக் காலமாக நீடித்து வருவதால், மதுரைக்கு ரயில் பயணத்தையே நம்பியிருக்கும் பலர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.





