
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்காக 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு
கோவிலில் திருமண மண்டபம், கலை அரங்கம், பூங்கா போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கோவிலில் ராஜகோபுரம் சீரமைப்பு, பக்தர்கள் தங்கும் விடுதிகள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவிலின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து நாளை திங்கட்கிழமை ஜூலை மாதம் 7 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
300 கோடியில் புரணமைப்பு பணிகள்
இந்த குடமுழுக்கு விழாவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிக்கு வேதபாராயணம் மற்றும் திருமுறை விண்ணப்பம் பாடப்படும். மேலும் நாதசுர இன்னிசை கச்சேரியுடன் பன்னிரு திருமுறைகள் திருப்புகழ் பாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கந்தர் அனுபூதி உள்ளிட்டவை செந்தமிழ் வேதங்கள் நிகழ்வு நடைபெற உள்ளாதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.பொதுவாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வழக்கமான நாட்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
குறிப்பாக சஷ்டி தைப்பூசம் விசாகம் கிருத்திகை உள்ளிட்ட முக்கிய நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த குடமுழக்கினை காண பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதற்காக தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு இணை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் பாதுகாப்பு வசதிக்காக சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
அவசர சிகிச்சைக்காக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். தொடர்ந்து அவர்கள் உணவருந்து வகையில் ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் உணவுகள் அமைக்கும் இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.சுமார் இந்த குடமுழுக்கு விழாவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக திருச்செந்தூருக்கு வரும் ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் ஜூலை எட்டாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார் இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் எந்தவித சிரமமின்றி கோவிலுக்கு செல்லலாம் என்று தெரிவித்துள்ளனர்.





