மீட்பு படைக்கு வந்த ஹெலிகாப்டர் முன் செல்பி எடுத்து முகம் சுழிக்க வைத்த மாணவிகள்

சற்றுமுன் தமிழகம்

selfie - 2026

தேனி குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருபக்கம் மாணவிகள் பத்து பேர் இறந்த சோகத்தால் தமிழகமே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் மீட்புப்பணிக்கு வந்த ஹெலிகாப்டர் முன் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் செல்பி எடுத்து கொண்ட சம்பவம் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க நேற்று இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் காட்டுப்பகுதியில் வந்திறங்கியது. இந்த ஹெலிகாப்டரை நோக்கி ஆசிரியர் பயிற்சி மாணவிகள் ஓடினர்.

மீட்புபணிக்கு உதவி செய்யவே இந்த மாணவிகள் ஓடுவதாக பலரும் நினைத்த நிலையில் ஹெலிகாப்டர் முன் அவர்கள் செல்பி எடுத்து கொண்டதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அந்த பகுதி மக்கள் தோளில் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்திருந்த நிலையில் மாணவிகளின் இந்த செயல் அனைவரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.