December 5, 2025, 10:18 AM
26.3 C
Chennai

தேனி: திருப்பரங்குன்றம் பிரச்னையின் நீட்சியாக தாமரைக்குளம்! இந்து முன்னணி கண்டனம்!

theni periyakulam perumal temple mosque issue - 2025

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள வேங்கடாசலபதி கரட்டில் உள்ள வேங்கடாசலபதி திருக்கோயில் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் வேற்று மதத்தினர் புதிதாக தர்ஹா உருவாக்கி செப்.10 புதன்கிழமை அன்று இறைச்சி விருந்து அமைக்க உள்ளதாகவும். இவ்வாறு அமைப்பதால் கோயிலின் தொன்மை பாதிக்கும், எனவே அனைத்து சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்து வேங்கடாசபதி திருக்கோயிலை பாதுகாக்க வேண்டும் என்றும் தகவல் பரவியது.

இந்நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக மேற்படி நிகழ்வு தடை செய்யப்பட்டிருக்கிறது. எனினும் இது தொடர்பில் போராட்டம் மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இது குறித்து விஎச்பி.,யின் சரவண கார்த்திக் குறிப்பிட்டது…

theri periyakulam thamaraikkulam - 2025

அடுத்த திருப்பரங்குன்றமா??காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக்குளம் கிராமம், இங்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது

சுமார் 600 வருடங்கள் பழமையான இந்த திருக்கோவிலில் தினசரி பூஜை நடந்து வருகின்றது, அருகிலுள்ள மக்களும் வழிபாட்டிற்கு வந்தது செல்கின்றனர்

இந்நிலையில் திருக்கோவிலின் அருகிலே தர்ஹா ஒன்றை உருவாக்கினர் சில இசுலாமியர்கள்.. முதலில் சின்ன‌ சமாதி போல இருந்த அந்த கட்டுமானம்‌ நாளடைவில் விரிவடைய தொடங்கி பெரிய கட்டிடமாகவே ஆகி விட்டது

இந்நிலையில் திடீரென 10/09/2025 அதாவது இன்று அந்த தர்ஹாவிலே தாங்கள் பலி கொடுத்து இறைச்சி சமைத்து சாப்பிட‌ போகிறோம் என இதுவரை இல்லாத ஒன்று அறிவித்தனர் சில இசுலாமியர்கள்

அருகிலேயே பெருமாள் சன்னதி, அப்படியிருந்தும் இறைச்சி சமைத்து சாப்பிட போகிறோம் என அறிவித்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் சில இசுலாமியர்களின் இந்த செய்கை அங்குள்ள ஹிந்துக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

உடனே‌ அங்குள்ள மக்கள் ஹிந்து அமைப்புகளை‌ நாட, உடனே‌‌ காவல்துறையிடம்‌‌ இந்து முன்னணி, பா.ஜ.க முறையிட்டதின் பெயரில் காவல்துறை இறைச்சி சமைத்து சாப்பிட கூடாது என‌ அனுமதி மறுத்தது, ஆனாலும் சைவ உணவை நாங்கள்‌ சாப்பிடுவோம் என இசுலாமியர்கள் அறிவித்து உடன் காவல்துறை‌ அவர்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது

இந்நிலையில் திருக்கோவிலுக்கு வழக்கமாக செல்லும் பக்தர்களை‌ இன்று‌ திருக்கோவிலுக்கு செல்ல காவல்துறை அனுமதி மறுத்துள்ளது, இதைக்கண்டித்து நமது சகோதர, சகோதரிகள் அனைவரும்‌ ஒன்று சேர்ந்து காவல்துறையிடம்‌ கேள்வி எழுப்ப காவல்துறை‌ அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளது

இதை அறிந்த இந்து முன்னணி, பா.ஜ.க, விஹெச்பி தலைவர்கள் அனைவரும்‌ ஒன்று சேர்ந்து‌ ஹிந்துக்களோடு திருக்கோவிலில் பெருமாளை‌ வழிபட சென்ற‌ போது‌ சுமார் 100 க்கும்‌ மேற்பட்டவர்களை‌ கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது திராவிட மாடல் காவல்துறை

பா.ஜ.க மாவட்ட‌ தலைவர் ராஜபாண்டி ஜி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் முருகன் ஜி, மாவட்ட செயலாளர் விஷ்ணு பிரியன் ஜி மற்றும் ஹிந்து இயக்க, பா.ஜ.க தவைவர்கள்‌ கைது செய்யப்பட்டுள்ளனர்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றமாக தாமரைக்குளத்தை மாற்ற சதி நடக்கிறதோ என‌ அங்குள்ள ஹிந்துக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

உடனே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதில்‌ தலையிட்டு திருக்கோவிலின் உரிமை‌ மற்றும் சம்பிரதாயத்தை நிலை நாட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு அங்குள்ள பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்

  • பாலு சரவணகார்த்திக், விசுவ ஹிந்து பரிஷத்

தேனி மாவட்டம், தாமரைக்குளம் பகுதியில் வேங்கடாசலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி ! தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் இது போன்ற சம்பவங்களை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் !- என்று, இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கை:

தேனி மாவட்டம், தாமரைக்குளம் பகுதி மலை மீது மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலுக்கு அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் சிறிய குடில் போட்டு தர்காவாக பயன்படுத்தி வந்தனர். சமீபகாலமாக அந்த இடத்தின் மீது பிறைக் கொடியை பறக்க விடுவது, கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை அழைத்து வந்து தொழுகை நடத்துவது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.

தாமரைக்குளம் பகுதியில் உள்ள பொது மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தை எப்படி தர்காவாக மாற்றலாம். நிலத்தை ஆக்கிரமிக்கும் முஸ்லிம்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாரிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்துள்ளனர்.

முதலமைச்சரின் கவனத்திற்கும் கடிதங்களை அனுப்பி உள்ளனர். ஆனால் அரசாங்க நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்து 150 அடிக்கு அருகிலேயே
முஸ்லிம்கள் பிணத்தைப் புதைப்பது, பிறைக்கொடியை பறக்க விடுவது போன்ற சம்பவங்களால் பொது அமைதி பாதிக்கப்படும் என்பதைக் கூட உணராமல் அரசாங்க அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வந்துள்ளனர்.

தற்போது முஸ்லிம்கள் அந்த இடத்தில் மிகப்பெரிய கூடாரம் ஒன்றையும் அமைத்துள்ளனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக இதை அமைக்கின்றோம் எனவும் கூறியுள்ளனர்.

புதிதாக கூடாரம் அமைப்பது பற்றியும் அரசு நிர்வாகத்திடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் புகார் அளித்தும் அரசு தரப்பிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அங்கு வாழும் இந்துக்கள், முஸ்லிம்கள் ஆக்கிரமித்த இடத்தைப் பற்றி புகார் கூறியதால் திடீரென்று முஸ்லிம்கள் அந்த மலையின் மீது 500 பேருக்கு கறி விருந்து நடத்துகிறோம் என அழைப்பு விடுத்தனர். மிலாடி நபியை ஒட்டி கந்தூரி விழா நடைபெறும் எனவும் சமூக வலைத்தளங்களில் செய்தியை பரப்பினர்.

வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் முஸ்லிம்கள் அசைவ உணவு சாப்பிடுவது இந்துக்களின் மன உணர்வை பாதிக்கும்
என்பதை கூட அறியாமல் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அமைதி காத்துள்ளது.

எப்போதும் இல்லாமல் திடீரென்று கூடாரம் அமைக்கும் முஸ்லிம்களை எச்சரிக்காமல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP )தலைமையில் அமைதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு அசைவு உணவு சாப்பிட வேண்டாம் என முஸ்லிம்களிடம் காவல்துறை கோரிக்கை வைத்தது. ஆனால் முஸ்லிம்கள் அதை உதாசீனப்படுத்திவிட்டு, சொன்ன தேதியில் மலை மீது அசைவ உணவு விருந்து வைப்போம் என வேலைகளை தொடர்ந்தனர்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாத ஊர் பொதுமக்கள், இந்து முன்னணி பொறுப்பாளர்கள், பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் ஆகியோர் போராட்டத்தை அறிவித்து மலையேற தயாரான போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு நிலத்தில் கோயிலுக்கு அருகில் அதுவும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வெங்கடாஜலபதி கோவிலின் அருகில்
நில ஆக்கிரமிப்பு செய்தவர்களை விட்டு விட்டு இந்துக்களை அடக்க நினைப்பது தமிழக அரசின் கையாலாகாத் தனத்தையும் சிறுபான்மை பாசத்தையும் காண்பிக்கிறது.

வேணுகோபால் கமிஷன் பரிந்துரையின் படி ஒரு வழிபாட்டுத் தலத்தின் அருகில்
இன்னொரு வழிபாட்டு தலம் அமையக்கூடாது என்பதையும் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தேனியில் உள்ள தாமரைக் குளம் பகுதியில் மட்டுமல்லாது கடந்த சில நாட்களாகவே திட்டமிட்டு முஸ்லிம்களால் பல இந்து கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

கடந்த ஜனவரி மாதம் திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகளை பலியிடுவோம் என‌ முஸ்லிம்கள் சென்றனர். அதை ஆரம்பத்திலேயே காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டதால், அது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அந்தப் பிரச்சனைக்கு பிறகு ஏற்பட்ட ஒட்டுமொத்த இந்து எழுச்சியால் முஸ்லிம்கள் நடத்தவிருந்த கந்தூரி விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை சம்பந்தமாக நீதிமன்றத்தில் இன்னும் வழக்குகள் நடந்து வருவதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கடையநல்லூரில் மிகவும் தொன்மை வாய்ந்த அகத்தியர் அருள் புரிந்த அத்ரி மலையை ஆக்கிரமிக்கும் முயற்சியிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த மலையின் மீது முஸ்லிம்கள் விழா நடத்துவதற்காக அந்தப் பகுதியில் பிரசுரம் விநியோகித்தனர்..

சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியில் இந்து கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள அரசு நிலத்தை முஸ்லிம்களின் ஈத்கா வழிபாட்டிற்காக அரசாங்கமே தாரை வார்த்தது.

இப்படி தொடர்ந்து இந்து கோவில்களின் நிலங்கள் பறிபோவதை அரசாங்கம் வேடிக்கை பார்க்கக்கூடாது.

திராவிட மாடலின் சிறுபான்மை ஆதரவு நிலைப்பாட்டால் இந்து கோவில்கள் அருகில் வேறு வழிபாட்டுத்தலங்கள் அமைவதை கண்டு இந்துக்கள் கொதிப்படைந்துள்ளனர் .

நேற்று 600 ஆண்டுகால பழமை வாய்ந்த வெங்கடாஜலபதி கோவிலின் புனிதத்தை காக்கப் போராடிய பொதுமக்களையும், இந்து அமைப்பினரையும் காவல்துறையினர் தாக்கியதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

கோவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories