
ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று பிரதமர் மோடி தனது உறுதியான குரலை நேற்றைய இரு இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி அஸாம் மாநிலக் கூட்டத்தில் பேசியவை…
நண்பர்களே, காங்கிரசுக்குத் தன்னுடைய வாக்குவங்கி அரசியல் தான் முக்கியமானது. காங்கிரஸ் தேசத்தின் நலன் பற்றிக் கவலைப்படுவதில்லை. இன்று காங்கிரஸ், தேச விரோதிகளுடைய, ஊடுறுவல்காரர்களுடைய பாதுகாவலனாக ஆகி விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ஊடுறுவல்காரர்களுக்கு ஊக்கமளித்தது. மேலும் இந்த காங்கிரஸ் என்ன விரும்புகிறது என்றால், இந்த ஊடுறுவல்காரர்கள், நிரந்தரமாக பாரதத்தில் வசிக்க வேண்டும், பாரதத்தின் எதிர்காலத்தை இந்த ஊடுறுவல்காரர்கள் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு காலத்திலே, மங்கல்தோய் அசாமின் அடையாளத்தைக் காப்பாற்ற, சட்டவிரோத ஊடுறுவல்காரர்களுக்கு எதிரான பெரும் போராட்ட களமானது. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசுகள் இதற்கும் கூட உங்களுக்கு தண்டனையை அளித்தார்கள். நீங்கள் இதற்குப் பழி வாங்கினீர்கள். இங்கே நிலத்தின் மீது சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ய காங்கிரஸ் உதவியது.
நம்முடைய நம்பிக்கைசார் இடங்களின் மீது, நம்முடைய விவசாயிகள் பழங்குடிகளின் உரிமை நிலங்களை ஆக்கிரமித்தார்கள். பிஜேபி எண்டியே அரசாங்கம் அமைந்த பிறகு, அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. இங்கே இருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஹேமந்த் அவர்களின் தலைமையிலே, அசாமிலே, இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், ஊடுறுவல்காரர்களிடமிருந்து மீட்டெடுக்கப்பட்டாகி விட்டது. Darrang மாவட்டத்திலும் கூட, மிகப்பெரிய நிலப்பரப்பிலிருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதே போல கோருகுட்டி பகுதியிலும் கூட, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊடுறுவல்காரர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள்.
இன்று அந்த நிலங்கள் எல்லாம் மீட்டெடுக்கப்பட்டாகி விட்டன. இப்போது அங்கே, விவசாயிகளுக்கு, கோருகுட்டி விவசாயத் திட்டம் அரங்கேறி வருகிறது. அங்கேயிருக்கும் இளைஞர்கள் இப்போது, விவசாயப் படை ஒன்றை ஏற்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள். கடுகு சோளம் உளுந்து பூசணி…… அனைத்தையும், அவர்கள் பயிர் செய்கிறார்கள்.
அதாவது முன்னர் எந்த நிலம், ஊடுறுவல்காரர்களின் பிடியில் இருந்ததோ, இன்று அதே நிலம், அசாமின் விவசாய வளர்ச்சியின் புதிய மையமாக ஆகி இருக்கிறது. நண்பர்களே பாஜகவின் அரசாங்கம், ஊடுறுவல்காரர்களை தேசத்தின், ஆதாரங்கள் வளங்களை, கைப்பற்ற கண்டிப்பாக அனுமதிக்காது. பாரதத்தின் விவசாயிகளே, பாரதத்தின் இளைஞர்களே, நம்முடைய பழங்குடிகளின் உரிமையை, யாரும் அபகரிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த ஊடுறுவல்காரர்கள், நமது தாய்மார்கள் சகோதரிகள் பெண்களுக்கு கொடுமை புரிகிறார்கள். இதை நாங்கள் நடக்கவிட மாட்டோம்.
ஊடுறுவல்காரர்கள் வாயிலாக, எல்லையோரப் பகுதிகளிலே, மக்கள் தொகையியலை மாற்றும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இது தேசப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அபாயமாகும்.
ஆகையால் இப்போது தேசத்திலே, ஒரு பெரிய மக்கள் தொகையியல் இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. பாஜகவின் இலட்சியம் என்னவென்றால், ஊடுறுவல்காரர்களிடமிருந்து தேசத்தைப் பாதுகாப்பது. ஊடுறுவல்காரர்களிடமிருந்து தேசத்திற்கு விடுதலை அளிப்பது…. – என்று குறிப்பிட்டார்.
”பீஹாரில் உள்ள ஊடுருவல்காரர்கள் நாட்டை விட்டு நிச்சயமாக வெளியேற்றப்படுவர். இதில் எந்த சமரசமும் இல்லை. முடிந்தால் இதை தடுத்து பாருங்கள்,” என்று, காங்கிரஸ் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் அமைந்துள்ள இண்டி கூட்டணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்தார்.
பீஹாரில் மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்., நவம்பரில் தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பீஹாரின் பூர்ணியா மாவட்டத்தில் பிரதமர் மோடி, 36,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர், பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது,
புரிந்து கொள்ளுங்கள். நண்பர்களே காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியால் பிஹாரின் சுயமரியாதைக்கு மட்டும் கேடு இல்லை, பிஹாரின் அடையாளத்துக்குமே கூட தீமை இருக்கிறது. இன்று சீமாஞ்சல் மற்றும் கிழக்கு பாரதத்திலே, ஊடுறுவல்காரர்கள் காரணமாக, மக்கள் தொகையியலில் பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது.
பிஹார் பங்கால் அசாம், என பல மாநில மக்கள், தங்கள் பெண்கள் மகள்கள் பாதுகாப்பு பற்றிய கவலையில் இருக்கிறார்கள். ஆகையால் தான் நான் செங்கோட்டையிலிருந்து பேசினேன், மக்கள் தொகையியல் மிஷன் பற்றி அறிவித்தேன். ஆனால் வாக்கு வங்கியின் சுயநலத்தைப் பாருங்கள்!!
காங்கிரஸ் ஆர்ஜேடி மற்றும் அவர்கள் சூழலமைப்பைச் சேர்ந்தவர்கள், ஊடுறுவல்காரர்களுக்கு வக்காலத்து வாங்கி வருகிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவதில் ஈடுபடுகிறார்கள். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், அந்நியநாடுகளிலிருந்து வந்த ஊடுறுவல்காரர்களோடு சேர்ந்து கொண்டு, கோஷங்கள் எழுப்புகிறார்கள், யாத்திரைகள் மேற்கொள்கிறார்கள்.
இவர்களெல்லாம், பிஹார் மற்றும் தேசத்தின் ஆதாரங்களை, மற்றும் பாதுகாப்பினை, இரண்டையுமே ஆபத்துக்கு உள்ளாக்க விரும்புகிறார்கள். ஆனால் இன்று, பூர்ணியாவின் மண்ணிலிருந்து, நான் இவர்களுக்கு ஒரு விஷயத்தை, நன்கு விளங்க வைக்க விரும்புகிறேன்.
இந்த ஆர்ஜேடி காங்கிரஸ்காரர்களின் எசப்பாட்டு, நன்கு காதுகளைத் திறந்து வைத்துக் கேட்டுக் கொள்ளுங்கள். ஊடுறுவல்காரர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வெளியேறியே ஆக வேண்டும். ஊடுறுவலைத் தடுத்து நிறுத்துவது, என் டி ஏவின் முழுமையான கடமையாகும். .. என்று பேசினார்.





