கனமழை எதிரொலி: முத்துநகர் எக்ஸ்பிரஸ் பாதிவழியில் நிறுத்தம்

Published:

train - 2026

நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்

அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றாழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கி தண்டவாளமே தெரியாத நிலை உள்ளது.

இதனையடுத்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரமே உள்ள நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் இஞ்சின் தடம் புரண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img