சோனியா காந்தியின் விருந்து பலனளிக்குமா?

இந்தியா சற்றுமுன்

sonia gandhi - 2026பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இந்தியாவில் 22 மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி இப்பொழுது முதலே காய்நகர்த்தி வருகிறது.

பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் நேற்று சோனியா காந்தி 20 கட்சி தலைவர்களுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் திரிணமூல் காங்கிரஸ், திமுக , சமாஜ்வாதி கட்சி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், உள்பட முன்னணி கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் கனிமொழி இந்த விருதில் கலந்து கொண்டார்

காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது கூட்டணியை அமைக்க மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் ஆகியோர் முயற்சித்த நிலையில் திடீரென சோனியா காந்தியின் விருந்தளித்துள்ளது அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்பட மத்திய அரசின் பல நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பில்லை என்பதை அதற்கு பின்னர் வந்த தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளன. இந்த நிலையில் சோனியா காந்தியின் விருந்தால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணையுமா? அப்படியே ஒன்றிணைந்தாலும் அது வெற்றியை தேடித்தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.