stephen - 2026

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் இன்று காலமானார். அவருக்கு வயது 73

இந்த நூற்றாண்டின் அதிபுத்திசாலிகளில் ஒருவரும் நரம்பு நோயினால் பாதிக்கப்பட்டு தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சர்க்கர நாற்காலியில் இருந்தபடியே கழித்தாலும் இயற்பியல் உலகில் பல சாதனைகளை படைத்தவருமான ஹாக்கிங் மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.,

இவருடைய குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் ஆய்வுகள் உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரால் பேசமுடியாது என்பதால் இவரின் கண் அசைவுகளை வைத்தே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கண்டுபிடிக்கும் சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் அவருடைய மூளையில் இருந்த ஆராய்ச்சி எண்ணங்கள் வெளிவந்தது.

ஏலியன்கள் மீது அதிக நம்பிக்கையுள்ள இவர், இந்த உலகில் கண்டிப்பாக ஏதோ ஒரு கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதாக நம்பினார். இவருடைய டைம் டிராவல் குறித்த ஆராய்ச்சி மிக முக்கியமானது. எதிர்காலத்தில் ஒளியை விட வேகமாக மனிதன் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது என்று இவர் கூறியுள்ளார் இந்த அரிய விஞ்ஞானியின் இழப்பு உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத இழப்புதான். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending