
ராஜஸ்தான் மாநிலத்தில் நவராத்திரி விழா, கடந்த 9 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு சென்றன.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில், நேற்று (அக்., 08) துர்கை அம்மன் சிலைகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தோல்பூர் மாவட்டம், பர்பதி ஆற்றில், துர்கை சிலைகளை கரைக்கும் போது பலர் தண்ணீரில் மூழ்கினர்.
இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 7 பேரின் உடலை மீட்டனர். தொடர்ந்து, மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
Rajasthan: Seven people have drowned during Durga idol immersion in Parbati river in Dholpur. pic.twitter.com/R12M8P5mRk
— ANI (@ANI) October 8, 2019