
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவையாக, தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு ரயில் எண் 06013 / 6014 இயக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை நாளை மாலை தாம்பரத்தில் புறப்பட்டு, சனிக்கிழமை காலை செங்கோட்டைக்கு நேர் வழியில் வந்து சேரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்பதிவு செய்யும் வகையிலான 11 இரண்டாம் வகுப்பு அமரும் பெட்டிகள், ஒரு குளிர்சாதன பெட்டி, நான்கு முன்பதிவில்லா அமரும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய 18 பெட்டி வண்டி. இதனால் தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பின் படி, வண்டி எண் 06013 – அக்டோபர் 17ம் தேதி வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் இரவு 7.30க்குப் புறப்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு மறு நாள் காலை 7.3க்கு வந்து சேரும்.
அதுபோல், வண்டி எண் 06014 அக்டோபர் 20ம் தேதி திங்கள் கிழமை இரவு 8.45க்கு செங்கோட்டையில் புறப்பட்டு, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை 9:45க்கு தாம்பரம் சென்றடைகிறது.
செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் நன்றி
செங்கோட்டைக்கு தாம்பரத்திலிருந்தும் தாம்பரத்திற்கு செங்கோட்டையிலிருந்தும் தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க ஆணை பிறப்பித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள் அனைவருக்கும் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மனமார்ந்த நன்றிகளையும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றனர். இதற்காக உதவிய பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் நிர்வாகிகள், தென்காசி விருதுநகர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இனிய நன்றி கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
07/10/25 அன்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் தெற்கு ரயில்வே அதிகாரிகள் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய கீழ்கண்ட மின்னஞ்சல் கடிதம்தான் தீபாவளி சிறப்பு ரயிலை பெற முக்கிய காரணியாக அமைந்தது என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த ரயில் அறிவிக்கப்பட்டு செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே ஏசி பெட்டி முன்பதிவு நிறைவடைந்தது. அடுத்த சில நிமிடங்களில் அமரும் பெட்டிகளின் முன்பதிவும் முழுமையாக நிறைவடைந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.





