
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
வடகிழக்குப் பருவமழை இன்றிலிருந்து தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருக்கிறது.
தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதிலிருந்தும் விலகிவிட்டது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டலக் காற்றுச்சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் வலுவான கிழக்கு-வடகிழக்குக் கஆற்று வீசுகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் விட்டுவிட்டு மழைபெய்யும். குறிப்பாக இரவு, அதிகாலை நேரங்களில் மழைபெய்யும்.
பிற இடங்களில் பகல்நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இன்று கடலூர் மாவட்டத்தில் இடி தாக்கியதால் வயலில் வேலைசெய்துகொண்டிருந்த நான்கு பெண்கள் இறந்துபோனதாகத் தகவல் வந்துள்ளது.
அரபிக்கடலில் நிலவும் வளிமண்டலக் காற்றுச் சுழற்சி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மஆறக்கூடும்.
வங்கக் கடலில் வருகின்ற 24ஆம் தேதி ஒரு காற்றாழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது. இது வலுவடைந்து, வடதமிழகப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்த காற்றாழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுவடையுமா, தமிழகத்தைத் தாக்குமா என்பது குறித்து 24ஆம் தேதி வானிலைத் தரவுகள் கிடைத்த பின்னரே சொல்ல இயலும்.





