U19 WC: 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதித்த இளம் இந்திய அணி!

u19 worldcup india won - 2026

யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இளம் இந்திய அணி சாம்பியன் ஆனது. 14வயது வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக விளையாடி 80 பந்துகளில் 175 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.

ஜிம்பாப்வே, நமீபியாவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் நடைபெற்றது. ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்த பைனலில் இந்திய. இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஆரோன் ஜார்ஜ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.  எனினும் மற்றொரு வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிரடி காட்டி ஆடினார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். 80 பந்துகளில் 15 சிக்ஸர், 15 பவுண்டரிகள் என எடுத்து, 175 ரன்னில் ஆட்டம் இழந்தார். அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 53 , வேதாந்த் திரிவேதி 32, விஹான் மல்ஹோத்ரா 30, அபியான் குன்டு 40, அம்பரீஸ் 18 என ரன்களை சேர்க்க, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன் எடுத்தது. 

412 ரன் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் பென் டாவ்கின்ஸ் மற்றும் ஜோசப் மூர்ஸ் ஆகியோர் ஓரளவு ரன் சேர்த்தனர். மூர்ஸ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். டவ்கின்ஸ் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் மேயஸ் 45 ரன்னிலும், கேப்டன் தாமஸ் ரேவ் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள். முதல் 4 விக்கெட் வரை சிறப்பாக விளையாடி வந்த இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை மிகக் குறைந்த ரன் இடைவெளியில் இழக்க, இந்திய அணியின் வசம் வெற்றி சாதகமானது. காலேப் பால்கோனர் மட்டும் சிறப்பாக விளையாடி 115 ரன் எடுத்து  ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. 

இதனால், 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி யு19 உலகக் கோப்பையை 6வது முறையாகக் கைப்பற்றியது. இதுவரை நடைபெற்ற 16 சீஸன்களில், இந்திய அணி 19 வயது உலகக் கோப்பை தொடரின் பைனலுக்கு 10 வது முறையாக முன்னேறியது. இதில் 2000, 2008, 2012, 2018, 2022,2026 என ஆறு முறை சாம்பியன் ஆனது.

இதுவரை யு-19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன்கள் : 
2000: முகமது கைப்
2008: விராட் கோலி
2012: உன்முக்த் சந்த்
2018: பிரித்வி ஷா
2022: யாஷ் துல்
2026: ஆயுஷ் மாத்ரே

இந்தப் போட்டியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான விளையாட்டு வித்தையை வெளிப்படுத்தியவர் 14 வயதே நிரம்பிய இளம் வைபவ் சூரியவன்ஷி. 

vaibhav suryavanshi - 2026

இவர் ஒரு ஐபிஎல் பிளேயர். U19 போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் எல்லாம் ஒழுங்காக விளையாட மாட்டார் என்று விமர்சித்தார்கள். விஜய் ஹசாரே போட்டியில் 150+ ரன்கள் அடித்த போது இந்திய பவுலர்களிடம்  மட்டும்தான் வீரத்தைக் காட்டுவான் என்றார்கள். ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் சரியா விளையாடவில்லை. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக விளையாடினார். ஆக, இவர் ஐபிஎல் போட்டிக்கு தான் லாயக்கு, இன்டர்நேஷனல் போட்டிக்கு தகுதியான ஆள் இல்லை என்று பாகிஸ்தான் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கிரிக்கெட்டர்களும்  விமர்சனத்தை முன்வைத்தார்கள். ஆனாலும் உள்ளூரில் வைபவ்க்கு ரசிகர் படை பெரிதானது. 

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து பதிலடியாக  U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் செம காட்டு காட்டி விட்டார் சூரியவன்ஷி! 80 பந்தில் 175 ரன்கள். 15 பவுண்டரி மற்றும் 15 சிக்ஸர். தன்னால் என்ன செய்யமுடியும் என்று இந்த உலகத்துக்குக் காட்டி விட்டார்! அடுத்து, U19 உலகக் கோப்பை போட்டியில் அதிக சிக்ஸர் (15) அடித்து சாதனை படைத்தார்!

55 பந்தில் செஞ்சுரி, 71 பந்தில் 150 ரன்கள். அதாவது, அடுத்த 16 பந்தில் 50 ரன் சேர்த்து சாதனை.  

இந்திய அணிக்கு முதல் 25 ஓவரில் 250-2 கிடைத்தது என்றால் காரணம் சூரியவன்ஷி! சூர்யவன்ஷி ஆட்டமிழந்த பின், அடுத்த 25 ஓவரில் 161 -7 எடுத்தது இந்திய அணி. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories