காங்கிரஸுக்கு இந்திய மக்கள் ஒரு சுமை: மாநிலங்களவையில் வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!

modi ji parliament speech - 2026

தமிழில், குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

நான் அசாம் பற்றிப் பேசுகிறேன்.  அங்கே தேர்தல் என்பதால் கூறுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.  இவங்க கொள்ளை பாவம் செஞ்சிருக்காங்க அதனால பேச வேண்டியிருக்கு.  காங்கிரஸ் வாய்ப்பந்தல் மட்டும் போடும்.  அதை அமல் செய்வது பற்றி கொஞ்சமும் கவலை கிடையாது. 

இப்போது அசாமின் போகிபீல் பாலத்தையே எடுத்துக் கொள்வோமே!!  இந்த போகிபீல் பாலம், அசாமையும் அருணாச்சலையும் இணைக்கும் மிக முக்கியமான பாலம்.  பல ஆண்டுகளாக இந்தத் திட்டம் தொங்கலில் இருந்தது.  நாங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தி அதை பரிசீலனை செய்தோம்.  மேலும், அசாமுடன் சேர்ந்து ஒட்டுமொத்த வடகிழக்கிற்கும், மிகப்பெரிய வசதியளிக்கும் பணியை, நாங்கள் நிறைவேற்றினோம். 

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, அமலாக்க விஷயம் பற்றிப் பேசுகிறோம் என்றால் நாங்கள், நாங்கள் எப்போதும் ஆதாரங்களை முன்வைத்தே பேசுகிறோம்.  நாங்கள் திட்டங்களை நேரத்திற்குள்ளாக நிறைவேற்றுவதிலே, முன்னேறுகிறோம்…. இப்போதெல்லாம் நடக்கும் பணிகள், குறித்த காலம் முன்னேயே நடக்கிறது அதோடு, ஒட்டுமொத்த உலகும் வியந்து பார்த்தது….

நாங்கள் 2030க்குள்ளாக இந்த கட்டம் அடைவோம் என்ற போது, சூரியசக்தியிலே.  ஆனால் அதை 2025லேயே அடைந்து விட்டோம்.   நாங்கள் எத்தனால் விஷயத்தில் தீர்மானம் செய்ததை, 2-3 ஆண்டுகள் முன்னதாகவே நிறைவேற்றி விட்டோம்.  முன்னதாகவே நாங்கள் நிறைவேற்றுகிறோம் அதைவிட அதிகம் எங்களுடைய அமலாக்க ஆற்றல்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

மதிப்பிற்குரிய முன்னவர் அவர்களே. பாஜகவாகட்டும் எண்டியேவாகட்டும், எங்களுடைய, அணுகுமுறை, விஷயங்களைப் பார்க்கும் எங்களுடைய பார்வை, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலே எங்களுடைய சிந்தனை, இதில் காங்கிரஸுக்கு இடையே வானுக்கும் பூமிக்குமான தொலைவு.  பெரிய இடைவெளி. 

நான் உங்களுக்கு ஒரு உதாரணம் அளிக்கிறேன்.  எங்களுடைய சிந்தனை என்னவென்றால், அதாவது 140 கோடி நாட்டுமக்கள், இவர்கள், எத்தனை திறமையுள்ளவர்கள், அவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிப்பார்கள்.  இதுதான் எங்களுடைய கருத்து.  நாங்கள் நாட்டுமக்களிடம் இந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம்.  அவர்கள் வல்லமை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.  இதுதான் ஜனநாயகத்தின் வல்லமையாகவும் இருக்கிறது.  ஆனால் காங்கிரஸ் நாட்டுமக்களையே பிரச்சனையாகப் பார்க்கிறது.  இதமட்டும் கூறிவிட்டு நான் சென்றால், இன்று இரவு அவர்களுக்கு தூக்கம் வராமல் போகலாம்.  எப்படி என்னை வையலாம் என்று திட்டம் போட்டுக்கிட்டு இருப்பார்கள். 

ஆனால் நான் உதாரணத்தோடு பேச விரும்புகிறேன், எந்த வகையிலே நாட்டுமக்களைப் பற்றி நினைக்கிறார்கள் பாருங்கள்.  நாட்டின் குடிமக்களைப் பற்றி, நேருஜி இந்திராஜியின் எண்ணம் எப்படி இருந்தது, நான் இந்த விஷயம் குறித்துப் பேச விரும்புகிறேன்.  இந்திரா அவர்கள், ஒருமுறை ஈரான் சென்றிருந்தார்.  அங்கே ஈரானிலே அவர் உரையாற்றி இருந்தார்.  அந்த உரையின் போது அவர், நேரு அவர்களுடனான தன்னுடைய உரையாடலைக் குறிப்பிட்டிருக்கிறார். 

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

அவரே கூறியிருக்கிறார்.  அவர் கூறியிருக்கிறார், அவர்…. இந்திரா அவர்கள் கூறியதை நான் மேற்கோள் காட்டுகிறேன்.  யாரோ ஒருவர், என்னுடைய தந்தையாரிடம் கேட்ட போது, அதாவது, நேருஜியிடம் கேட்டிருக்கிறார்கள், அதாவது அவர்முன்பாக எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன?  அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?  35 கோடி. 

நேருஜி என்ன பதில் கொடுத்தார்?  அவர் முன்பாக இருந்த பிரச்சனை என்றால் 35 கோடி என்றார்.  அந்தக் காலத்திலே நமது தேசத்தின் மக்கட்தொகை 35 கோடி.  அடுத்து இன்னும் கேளுங்கள்!!  35 கோடி நாட்டுமக்கள் நேரு அவர்களுக்கு பிரச்சனையாகத் தெரிந்தார்கள். 

அந்த மாதிரி ஒரு பிரதமர் சிந்திக்க முடியுமா ஐயா?  மேலும், இந்த விஷயத்தை உதாரணமாக இந்திராஜி மேலும் கூறினார்.  இன்று நாட்டின் மக்கட்தொகை, 57 கோடியாகும்.  ஆகையால் என்னுடைய பிரச்சனைகளின் அளவும் அத்தனை மடங்கு அதிகரித்திருக்கிறது.  அதாவது தந்தையாருக்கு 35 கோடி நாட்டுமக்கள் பிரச்சனையாகத் தெரிந்தார்கள். 

இவருக்கோ 57 கோடி, பிரச்சனையாக இருக்கிறது.  இப்படியும் யாராவது இருக்க முடியுமா?  தன்னுடைய நாட்டுமக்களையே பிரச்சனையாகக் கருதுவார்களா?   இது தான் அவர்கள் எண்ணத்துக்கும் எங்களின் எண்ணத்துக்கும் இடையிலான வித்தியாசம்.  இது தான் எங்கள் அணுகுமுறைகளுக்கு இடையிலான வித்தியாசம்.  நேருஜியாகட்டும் இந்திராஜியாகட்டும் அல்லது ஒட்டுமொத்த காங்கிரஸ் நினைப்பாகட்டும், இவர்களெல்லாம், பாரத நாட்டுமக்களை, பிரச்சனையாகவே பார்க்கிறார்கள். 

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

மதிப்பிற்குரிய அவை முன்னவர் அவர்களே, என்னுடைய பல மேற்கோள்கள் இருக்கின்றன.  நான் உலகத்தின் முன்பாகவும் நாட்டின் முன்பாகவும் கூறியிருக்கிறேன்.  நான் என்ன கூறியிருக்கிறேனோ, அதுவே என்னுடைய உறுதிப்பாடு.  எத்தனை தான் சவால்கள் முன்பாக இருக்கட்டுமே, அட 140 கோடிநாட்டுமக்கள் நம்முடன் இருக்கிறார்கள்.

திருட்டுத்தனம் செய்வது இவர்களுடைய பரம்பரைத்தொழில்.  இந்த நபர்கள், ஒரு குஜராத்தியின் குடும்பப் பெயரைக்கூட திருடி விட்டார்கள்.  காந்தியடிகளின் குடும்பப் பெயரைத் திருடி விட்டார்கள். 

இந்த நபர்களை, தேசத்தின் மக்கள் எத்தனை புத்திசாலிகள் என்றால், இவர்களை வெள்ளாவியில் வெளுத்துக் கட்டி விட்டார்கள் இவர்களை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories