பொறுத்தது போதும் பொங்கியெழு! இளைஞர்களை தூண்டிவிடும் கனிமொழி

சற்றுமுன் தமிழகம்

periyar 1 - 2026

பாஜக தேசிய செயலாளர் ராஜாவின் அட்மின், எந்த நேரத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தாரோ, அதுமுதல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. ஆங்காங்கே கடந்த சில நாட்களாக பெரியார் சிலைகள் சேதப்படுத்தி வரும் நிலையில் மீண்டும் வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டரில் ‘பொறுத்தது போதும் பொங்கியெழு’ என்று பதிவு செய்துள்ளார். கனிமொழியின் இந்த பதிவிற்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீங்களே சிலையை உடைத்துவிட்டு அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை வன்முறையாக்க முயற்சிக்கின்றீர்கள் என்று பலர் அநத டுவிட்டுக்கு பதிலளித்துள்ளனர்.

ஏன் இந்த கேடு கெட்ட அரசியல்?????????? உடைத்தது யார்?????? நீங்கள் தான் உடைத்தீர்கள் என்ற சந்தேகம் உள்ளது’ என்று ஒருவரும், அப்ப கலவரம் செய்யுங்கன்னு சொல்லுறிங்களா மேடம்’ என்று மற்றொருவரும் இதுபோல் பலரும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.,

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.