
செங்கோட்டை புனலூர் வழியாக ரயில் சேவை வெள்ளிக்கிழமை நாளை தொடங்குகிறது.
தாம்பரம் – கொல்லம் – தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் ஒன்று, கடையநல்லூர், செங்கோட்டை, புனலூர் வழியாக இயக்கப்படுகிறது.
சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்கள் அதிகம் எதிர்பார்த்த செங்கோட்டை – புனலூர் அகல ரயில் பாதையில் நாளை தாம்பரம் – கொல்லம் – தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வண்டி எண்: 06027, தாம்பரம் – கொல்லம் சிறப்பு ரயில் மார்ச் 30ம் தேதி (வெள்ளி) அன்று, தாம்பரத்திலிருந்து மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 05.50க்கு செங்கோட்டை வந்து கொல்லத்திற்கு காலை 10.30 மணிக்கு போய் சேரும்.
வண்டி எண்: 06028, கொல்லம் – தாம்பரம் சிறப்பு ரயில் மார்ச் 31ம் தேதி (சனி) அன்று, கொல்லத்திலிருந்து மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 04.55 மணிக்கு செங்கோட்டை வந்து, மறுநாள் காலை 05.00 மணிக்கு தாம்பரம் போய் சேரும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம் , விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், தென்மலை, எடமண், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி ரூ. 235/- படுக்கை வசதி ரூ.490/- மூன்று டயர் குளிர்சாதன வசதிப் பெட்டியில் ரூ.1340/- என கட்டணங்கள் உள்ளன. இது தாம்பரத்தில் இருந்து கொல்லம் வரையிலான கட்டணம் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் கே.எச். கிருஷ்ணன் கூறினார்.



