பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் கடும் உயர்வு

Published:

cars petrol - 2026

சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. பெட்ரோல் விலையும் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் 48 பைசாவிற்கு விற்கப்படும் நிலையில் , டீசல் விலை முதன்முறையாக 68 ரூபாயை கடந்து 68 ரூபாய் 12 பைசாவிற்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

2012 முதல் 2016 வரையிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் மீதான கலால் வரி 11 ரூபாய் 77 பைசாவும், டீசல் மீதான கலால் வரி 13 ரூபாய் 47 பைசாவும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத்தொடங்கிய நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி 2 ரூபாய் குறைக்கப்பட்டது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img