
மதுரை: திமுக.,வின் முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரித்து 5ஆம் தேதி நடைபயணம் ரத்து செய்யப் படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் மத்திய அரசைக் கண்டித்து திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு மதிமுக., ஆதரவளிக்கும் என்று கூறியிருந்தார் வைகோ. இந்நிலையில், முழு அடைப்புப் போராட்டத்தை திமுக., ஏப். 5ம் தேதி நடத்துகிறது. இந்தப் போராட்டத்தை ஆதரித்து, தனது 5ம் தேதி நடைப்பயணத்தை ரத்து செய்துள்ளார் வைகோ.
கர்நாடகாவில் பாஜக அழிந்துவிடும் என்பதால் வாரியம் அமைக்க அஞ்சுகிறார் மோடி என்று தெளிவாகக் கூறிய வைகோ, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதால் காவிரி வாரியம் அமைக்கப்படவில்லை;இரண்டு அணைகளைக் கட்டி தமிழகத்தை அழிக்கப்பார்க்கிறது என்று திமுக., கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆளும் கர்நாடக முதல்வருக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு பதிலாக பிரதமர் மோடியை குற்றம் சாட்டியுள்ளார் வைகோ.



