மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதா? மின்வாரியம் விளக்கம்!

Published:

TNEB - 2026

ஏப்ரல் 1ந்தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி வதந்தி என்றும், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஏப்.1 முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த மாதத்துடன் 4 சதவிகிதம் சர்ஜார்ஜ் வசூலிக்கப்படும் என செய்தி பரவியது. சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற தகவல்கள் வெளியாகி புதிய பட்டியலும் வெளியானது.

இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மின் கட்டணம் உயர்த்தியிருப்பதாக வரும் செய்திகள் வதந்தி என்றும், தற்போது மின்கட்டண உயர்வுக்கான அறிகுறிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்றும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img