இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு.. ‘நோ நீட்’: எடப்பாடி உறுதி!

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்

edappadi pazanisamy - 2026

சென்னை: சித்தா, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வுகள் இல்லை என்றும், பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சித்தா, யுனானி, ஆயுர்வேதா ஆகிய இந்திய மருத்துவ முறைப் படிப்புகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்; நீட் தேர்வு தேவையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்புகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்த இயலாது என கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.