December 6, 2024, 10:36 PM
27.6 C
Chennai

ரஜினிக்கு செங்கோட்டையன் பாராட்டோ பாராட்டு..! எதற்கு தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டுள்ளார். தமிழகம் கல்வியில் சிறப்பாக உள்ளது என்றும், அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் ரஜினி பாராட்டியதற்குதான் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இப்படி நன்றி தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை இன்று சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அமைச்சர் செங்கோட்டையன். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் பிற மாநிலங்களை ஒப்பிட்டால், கல்வி சிறப்பாக உள்ளது; அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார் என்று பாராட்டியது குறித்து கருத்து கேட்டனர்.

அதற்கு அவர், நடிகர் ரஜினிகாந்த்தின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அரசு சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றி என்றார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு மேலும் அவர் விளக்கம் அளித்த போது, தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் கல்வித்துறை சார்பாக ஐஏஎஸ் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ. என்கிற பட்டயக் கணக்காளர் கல்வி படிப்பதற்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.