கிண்டி சிறுவர் பூங்கா நாளை வியாழக்கிழமை அதாவது ஏப்ரல் 12ஆம் தேதி ஒருநாள் மட்டும் இயங்காது என தமிழ்நாடு வனத்துறை செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
நாளை பிரதமர் மோடி கிண்டி சிறுவர் பூங்கா அருகில் இருக்கும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு வருகை தர உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை கிண்டி சிறுவர் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.




